வீரவணக்கம்

கப்டன் வானதி
சண்முகநாதப்பிள்ளை பத்மசோதி
3ம் வட்டாரம், நைனாதீவு,
யாழ்ப்பாணம்
19.02.1964 – 11.07.1991
11.07.1991 அன்று ஆனையிறவு தடை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
ஆனையிறவுச் சண்டையிலே இரண்டு கவிஞர்களை நாங்கள் இழந்து விட்டோம். காட்டின் பயிற்சித்தள வாழ்க்கையிலிருந்து ஆனையிறவில் வீரச்சாவடையும் வரை, இவர்களின் கவிக்குரல்கள் ஒலிக்காத இடமில்லை .
சிலாவத்துறை இராணுவத்தளத்தை நாம் தாக்கிக்கொண்டிருக்கின்றோம்.
முப்படைகளுக் கும் ஈடுகொடுத்தபடி, முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள் எமது வீரர்கள். எமது போராளிகள் விழ, விழ விடுதலையின் வேகம் அதிகரிக்கின்றது.
வானதியக்கா தனது குழுவின் சகல போராளிகளையும் இழந்துவிட்டாள்.
வேதனை தந்த வேகத்தினால் மிகவும் முன்னேசென்றுவிட்டாள்.
தாக்குதலில் அடுத்த நடவடிக்கையாக, கரும்புலி மேஜர் டாம்போ தன் வாகனத்துடன் உள்ளே நுழையப் போவதாக அறிவிக்கப்படுகின்றது. எல்லோரையும் சற்றுப் பின்னுக்கு வந்து காப்பு எடுக்குமாறு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. எல்லோரும் நிலை எடுத்துவிட்டார்கள். வானதி அக்கா மட்டும் இன்னமும் நிலை எடுக்கவில்லை .
“பிள்ளைகள் எல்லோரும் போய்விட்டார்கள்.
நான் என்ரை பொயின்ரைப் பிடிக்காமல் திரும் பமாட்டன்”.
இது வானதியக்காவின் பதில் அறிவிப்பு.
நிலை எடுக்குமாறு கட்டளைகளையும் ‘ப்ளீஸ் அவுட்’ என்ற பதிலையும் மாறி, மாறிவோக் கிகள் அறிவிக்கின்றன. இறுதியில் விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் பொறுப்பாளராக இருந்தவர் “வானதி, நீங்கள் அந்த இடத்திலேயே நில்லுங்கள். நான் அங்கே வருகின் றேன்” என்று அறிவிக்கின்றார். வானதி அக்காவுக்குத் தெரியும், எங்கள் தலைமைகளுக்குத் தமது உயிர்களைவிட தங்கள் போராளிகளின் உயிர்கள் தான் முக்கியம் என்பது. உடனே தான் நிலை எடுப்பதாக அறிவிக்கின்றாள். தனது மேலோங்கிய விடுதலை உணர்வின் முன்னும், தனது தலைமைக்கு அவள் கொடுத்த மரியாதை இது.
கஸ்தூரி புலிகளின் குரல் வானொலியின்தொடர்நாடகமான ‘சிந்தாமணியில் ஆச்சி யாகக் குரல் கொடுத்தாள். கலை, பண்பாட்டுப் பிரிவின் தெருக்கூத்தில் போராளியாகப் பாத்திரமேற்றாள். ‘களத்தில் காத்தான்’ சிந்து நடைக்கூத்தில் இந்தியச் சிப்பாயாக வந்து, எமது மக்கள் இந்திய இராணு வத்தால்பட்ட அவலங்களைத் தெளிவுப்படுத்தினாள்.
எந்தப் பாத்திரத்தைக் கஸ்தூரிக்குக் கொடுத்தாலும், அந்தப் பாத்திரம் கஸ்தூரியினால் சிறப்புப்பெற் றுத்தான் ஆகவேண்டும். இது கஸ்தூரியின் திறமையின் வெளிப்பாடு. இன்று எம்மக்கள் அந்தப் பாத்திரங்களைப் பேசிக்கொள் கின்றார்கள்.
அந்தக் குரலை – முகங்களை மீண்டும் பார்க்கத் துடிக்கின்றார்கள்.
இந்திய அரசின் நயவஞ்சகத் தால் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பன்னிரு வேங்கைகளுக்கும் முதலாம் ஆண்டு நினைவுக் கூட்டம், தீருவில் மைதானத்தில் நடைபெறுகிறது.
சுற்றிவர வல்லாதிக்கத்தின் துப்பாக்கி வேலிகள். ஆனாலும் எம்மக்கள் துணிந்திருந்தார்கள். ஓங்கி ஒலிக்கிறது வானதியக்காவின் விடுதலைக் குரல்.
நல்லூர் வீதியில் ….
பார்க்குமி டமெங்கும் மனிதத் தலைகள். மேடையில் திலீபன் அண்ணா . திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதத்தை ஆதரித்து மேடையில் பேச்சுக்கள்
கவிதைகள்….. ஒரு பெண்கவிக் குரல் உண்மையை உரைக்கின்றது. உள்ளத்திலிருந்து அது வருகின்றது. திலீபன் அண்ணா மீண்டும் வாசிக்கச் சொல்லுகின் றார். எல்லாப் போராளிகளும் ஏக்கத்தோடு திலீபன் அண் ணாவைப் பார்க்கச் செல்லுகின் றார்கள். அத்தனை மக்களும் கண்ணீர்மல்க விம்முகிறார்கள். இது அந்தக் கவிதைக்கு மட் டுமே உரித்தான சக்தி. இந்தக் கவிதைதான் கஸ்தூரியை எல் லோருக்கும் இனங்காட்டியது.
தனது புதிய சீருடையை “இங்கே யாருக்காவது கொடுங்கள்”என்று வைத்துவிட்டுச் சென்ற கஸ்தூரியையும், தன் பிள்ளைகளோடு ஆண்டியாகவே திரிந்த வானதியக்காவையும் எம் கண்கள் தேடுகின்றன.
வசதியை இவர்கள் தேடியதே இல்லை. மாணவர் அமைப்பு வேலைகள் செய்யும்போது, காங்கேசன்துறையிலிருந்து பூம்புகார் வரை வானதியக்காவின் மிதிவண்டி ஓடும்.
தளத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று சும்மா நின்றாலும், ஒரு மிதிவண்டியின் துணைபோதும் கஸ்தூரிக்கு. வேலையை மட்டும்தான் அவர்கள் தேடினார்கள்.
கடைசியாகச் சண்டைக்குப் புறப்படும்போது, “இந்த ஆனையிறவு முகாமை எப்பிடியும் நாங்கள் பிடிக்கவேணும்” இது வானதியக்கா.
“சண்டையில் எல்லோரும் இரண்டு ஆயுதம் எடுத்தால், நான் நாலு ஆயுதம் எடுக்கவேண்டும். திரும்பி வந்தால் நாடகம் போடவேண்டும். புதிய பாடல்கள் கொண்ட ஒலிப்பதிவு நாடா ஒன்றை மகளிர் படையணி வெளியிடவேண்டும்” இது கஸ்தூரி.
-களத்தில் இதழ்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”