-மதுரை-
அவர் பேசியதாவது:
கல் தோன்றி மண் தோன்றாக் காலம் முதலே ஆடு, மாடுகள் நம் வாழ்வியலோடு ஒன்றி, உடன்பிறந்தவைகளாக இருக்கின்றன. காலுக்கு செருப்பாகவும், தோளுக்கு தோல் பையாகவும் மாடுகளின் தோல் பயன்படுகிறது. ஆனால், அவை உண்பதற்கு வைக்கோல் இல்லை.

மாடுகளிடம் இருந்து பெறப்படும் பால், வெண்ணெய், நெய் உள்ளிட்டவற்றை உண்கின்றனர். அவையோ போஸ்டர்களையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் உண்கின்றன.
தமிழகத்தில் 12 லட்சம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலம் உள்ளதாக கூறுகின்றனர். அவற்றை ஆக்கிரமித்து அழித்துவிட்டனர். தமிழகத்தில் 1 லட்சத்து 38,000 கோடி ரூபாய் அளவுக்கு, பாலுக்கான சந்தை மதிப்பு உள்ளது. ஆனால், வெறும் 50,000 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள சாராயத்தை குடிக்க வைத்து தாய்மார்களின் தாலியை அறுக்கின்றனர்.
கால்நடைகளை பற்றி கவலைப்படாத கால்நடைத் துறை உள்ளது. மாடே இல்லாமல் மாட்டுப் பாலை பால்வளத் துறை விற்கிறது. நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் செல்வதால் கால்நடைகள் குடிக்க நீரின்றி தவிக்கின்றன.
கேரளாவில் கட்டுமானங்களுக்கு தேவைப்படும் மண், கற்கள் குமரி மலைகளில் இருந்து செல்கிறது. அதற்கு பதிலாக குப்பை, கழிவுகளை இங்கு கொட்டுகின்றனர்.
அவர்களது மலை பாதுகாப்பாக உள்ளது. இந்நிலையில், மலையடிவாரத்தில் கால்நடைகளை மேய்ப்பதால் பாதிப்பு ஏற்படும்.
ஆடு மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல; வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளராது. அவை இன்றி இயற்கை விவசாயம் கிடையாது. பால் இருக்கும் வரை நாட்டில் பசி பட்டினி இருக்காது. ஆக., 3ல் தேனி மலையடிவாரத்தில் நானே மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வேன். – இவ்வாறு அவர் பேசினார்.
இம்மாநாட்டில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முன், ஆடு-மாடுகள் நிறுத்தப்பட்டிருந்தன.