-தென் தமிழீழம்-

லெப்.கேணல் சேனாதிராசா
இராமலிங்கம் பத்மசீலன்
ரமேஸ்புரம், செங்கலடி, மட்டக்களப்பு
22.11.1971 – 13.07.2004
13.07.2004 அன்று மட்டக்களப்பு பகுதியில் அடையாளம் தெரியாதவர்களினால் நடாத்தப்பட்ட தாக்குதலில் வீரச்சாவு
மட்டக்களப்பு மருத்துவமனையில் 13.07.2004 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட மட்டு. நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சேனாதிராஜாவின் 18 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு நகரில் அரசியற் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த லெப்.கேணல் சேனாதிராஜா 05.07.2004 அன்று அரசடிச் சந்திப் பகுதியில் வைத்து சிறிலங்கா படை ஒட்டுக்குழுவின் துப்பாக்கிச் சூட்டில் விழுப்புண்ணடைந்து மட்டக்களப்பு மருத்துவமனையில் பண்டுவம் (சிகிச்சை) பெற்றுவரும் வேளை 13.07.2004 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
அரசியற்துறையின் முக்கிய போராளியான லெப்.கேணல் சேனாதிராஜா, மட்டக்களப்பு மண்ணில் துரோகச் செயற்பாடு முறியடிக்கப்பட்ட பின்னர் மீளவும் மட்டக்களப்பு நகர அரசியற் பொறுப்பாளராக கடமையேற்று விடுதலைப் போராட்டத்தை மீளக்கட்டியமைக்கும் பணியினை முழுமூச்சாக மேற் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”