
வரலாற்றில் இன்று
லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட் மலையின் மேல் ஹாலிவுட் குறியீடு அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது(1923) |
இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன(1844) |
பெர்லின் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது(1878) |
முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உருகுவேயில் நடைபெற்றன(1930) |
13 ஜூலை 2025 | ஞாயிறு | இன்று – சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00). | |
தேதி | 29 – ஆனி – விசுவாவசு | ஞாயிறு |
நல்ல நேரம் | 07:45 – 08:45 கா / AM 03:15 – 04:15 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 10:45 – 11:45 கா / AM 01:30 – 02:30 மா / PM |
இராகு காலம் | 04.30 – 06.00 |
எமகண்டம் | 12.00 – 01.30 |
குளிகை | 03.00 – 04.30 |
சூலம் | மேற்கு |
பரிகாரம் | வெல்லம் |
சந்திராஷ்டமம் | பூசம் |
நாள் | மேல் நோக்கு நாள் |
லக்னம் | மிதுன லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 39 |
சூரிய உதயம் | 05:59 கா / AM |
ஸ்ரார்த திதி | திரிதியை |
திதி | இன்று அதிகாலை 02:47 AM வரை துவிதியை பின்பு திரிதியை |
நட்சத்திரம் | இன்று காலை 08:14 PM வரை திருவோணம் பின்பு அவிட்டம் |
சுபகாரியம் | மருந்து உண்ண | பேட்டி காண | யாத்திரை செய்ய சிறந்த நாள். |
இன்றைய ராசி பலன்.
மேஷம் | நஷ்டம் |
ரிஷபம் | சிக்கல் |
மிதுனம் | நன்மை |
கடகம் | சுகம் |
சிம்மம் | தோல்வி |
கன்னி | பீடை |
துலாம் | வெற்றி |
விருச்சிகம் | செலவு |
தனுசு | பயம் |
மகரம் | கவலை |
கும்பம் | லாபம் |
மீனம் | ஆதரவு |
இன்றைய ராசி பலன் | 13 ஜூலை 2025 | ஞாயிறு.
மேஷ ராசி நேயர்களே குடும்ப செலவுகளைக் குறைக்க பார்க்கவும். உறவினர்கள் அன்பு பாராட்டுவர். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். | ரிஷப ராசி நேயர்களே நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். |
மிதுன ராசி நேயர்களே குடும்ப நிதி நிலைமை சீரடையும். சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும். | கடக ராசி நேயர்களே மனம் சந்தோஷம்படியான செய்தி ஒன்று வரும். உற்றார், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிரபலங்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். |
சிம்ம ராசி நேயர்களே யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். | கன்னி ராசி நேயர்களே வேண்டியவருக்கு உதவி செய்வதில் ஆர்வம் கூடும். மனக்குறைகள் நீங்கும். எதிர்ப்புகள் தானாக விலகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். |
துலாம் ராசி நேயர்களே புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும். | விருச்சிக ராசி நேயர்களே தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோரிடம் ஏற்பட்ட மன கசப்பு நீங்கும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். |
தனுசு ராசி நேயர்களே மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். | மகர ராசி நேயர்களே பயணங்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். மாறுபட்ட அணுகு முறையால் எதிலும் ஜெயிக்க முடியும். பண விவகாரத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. |
கும்ப ராசி நேயர்களே குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிரியமானவர்களின் வருகை இருக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் ஏற்றம் இறக்கம் காணப்படும் | மீன ராசி நேயர்களே சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். உறவினர்கள் அன்பு பாராட்டுவர். வாகன பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். |
வார ராசி பலன் (07-07-2025 To 13-07-2025)
மேஷ ராசி அன்பர்களே இந்த வார பலன்படி, எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுக்க முடியும். மனதில் இருந்த வீண் கவலைகள் நீங்கும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உங்களுடைய பெரிய பலம். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பெற்றோர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கனவுத் தொல்லைகள் அவ்வப்போது வந்து போகும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்குழப்பங்கள் தீரும். குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடைபெறும். குடும்ப சிக்கல்கள், பிரச்சனைகள் போன்றவற்றை சமாளிக்க வேண்டியது இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பான முறையில் செல்லும். பரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும் | ரிஷப ராசி அன்பர்களே இந்த வார பலன்படி, ஆன்மீக பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். மனதில் நினைத்திருந்த விஷயம் எளிதில் முடியும். குடும்பத்தில் நிலவிய குழப்ப நிலை நீங்கும். பயணங்களால் நன்மை உண்டாகும். சிந்தித்து செயல்படுவதால் பல காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். மனதில் இருந்த குழப்பம், கவலைகள் நீங்கும். புதிதாக சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீடு, மனை சம்பந்தமான காரியங்கள் அனுகூலம் தரும். கொடுக்கல் வாங்கல் திருப்தியாக இருக்கும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டு. பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும் |
மிதுன ராசி அன்பர்களே இந்த வார பலன்படி, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்ய போய் உபத்திரத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பெற்றோர்கள் மூலம் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி பயணங்கள் மேற்கொள்ள முடியும். உற்றார், உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். கணவன் மனைவி ஒற்றுமையில் நல்ல பலம் உண்டு. பல எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். பணப்புழக்கம் ஓரளவு சொல்லும்படி இருக்கும். மேலும், வரவேண்டிய நிலுவை பணம் கைக்கு வந்து சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்துடன் பல புண்ணிய ஸ்தலங்கள் சென்று வரும் பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை உருவாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் இருந்த சிக்கல் தீரும். தொழில், வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும். பரிகாரம் : குல தெய்வத்தை வணங்கி வழிப்படவும் | கடக ராசி அன்பர்களே இந்த வார பலன்படி, உங்களுடைய நல்ல செயல்களால் பெயர், புகழ் கிடைக்கும். புது முயற்சிகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டிவரும். பண விஷயங்களில் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். எதிரிகளின் பலன் குறையும். உடல் நலம் சீராக இருக்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். பிரியமானவர்கள் வழியில் ஆதாயம் உண்டு. எந்த ஒரு காரியத்திலும் துணிச்சலாக செயல்பட முடியும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரும். தூரத்து உறவினர்கள் வழியில் நன்மைகள் உண்டு. எதிர்பார்த்த பணம் சில தடங்கலுக்கு பின் கைக்கு வரும். புது நட்பு வட்டாரம் உருவாகும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். புதிய நபர்களுடன் பழகும் போது எச்சரிக்கையாக இருக்கவும். உத்யோகத்தில் விரும்பிய இடமாற்றம் வரும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பரிகாரம் : வராகியை வணங்கி வழிப்படவும் |
சிம்ம ராசி அன்பர்களே இந்த வார பலன்படி, சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்கால நலன் கருதி பண சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். உறவினர்களிடம் முக்கிய விஷயங்களில் அனுசரித்து போகவும். குடும்ப பெரியோர்களிடம் உங்கள் மனக் குறைகளை எடுத்து சொல்லவும். எதிர்பாராத பல செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்த வரை கடன் வாங்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். நண்பர்களுடன் அநாவசிய கருத்து வேறுபாடு தோன்றும். சற்று அதிகப்படியான அலைச்சலினால் உடல் அசதி ஏற்படும். குடும்பத்தில் அடிப்படை வசதிகள் பெருகும். பெண்கள் வகையில் சில நன்மைகள் உண்டு. உத்யோகத்தில் வேலை பளு குறையும். தொழில், வியாபாரத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும் | கன்னி ராசி அன்பர்களே இந்த வார பலன்படி, புது திட்டங்கள் தொடர்பாக நிறைய நபர்களை சந்திக்க வேண்டியது இருக்கும். மன தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபசெலவு உண்டாகும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எடுக்க போகும் புதிய முயற்சிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் வேண்டிய கட்டாயம் வரும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். வாகனத்தால் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். பிரியமானவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. யாரை நம்பியும் எந்தவிதமான செயலையும் செய்ய வேண்டாம். மன நிம்மதிக்காக ஆலய வழிபாட்டை மேற்கொள்ளவும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடைறுகள் நீங்கும். பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும் |
துலாம் ராசி அன்பர்களே இந்த வார பலன்படி, குடும்பத்தை பற்றிய கவலை உண்டாகும். தெய்வ அனுகூலம் சிறப்பாக உண்டு. மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உங்களிடம் அபரிதமான திறமை இருக்கும். செலவுகள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இருக்கும். பண வரவில் இருந்த தடை நீங்கும். உடல் ஆரோக்கியத்தை தரும். வீண் கவலை நீங்கும். தடைபட்ட காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் ஏற்படும். வசதி வாய்ப்புகள் வெகுவாக உயரும். பொறுப்பான காரியங்களால் உங்களின் மரியாதை கூடும். பயணங்களால் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் ஆர்வம் காட்டாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும். பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிப்படவும் | விருச்சிக ராசி அன்பர்களே இந்த வார பலன்படி, குடும்பத்தில் ஆனந்தமும், குதூகலமும் நிலவும். பொருளாதார வளம் மேம்படும். சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் கூடும். பேச்சு திறமையால் பல சிறப்பான செயல்களை செய்ய முடியும். மனதில் பல கவலைகள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் பணிகளை தொடரவும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். உடன்பிறப்பு வழியில் நன்மை உண்டாகும். யாருக்கேனும் கடன் கொடுத்தால் அது திரும்ப வருவது கடினமாகும். சற்றும் எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள், எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். பக்தி உணர்வு மேலோங்கும். எதையும் ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் இருக்கும். உத்யோகத்தில் புதிய திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். பரிகாரம் : முருகரை வணங்கி வழிப்படவும் |
தனுசு ராசி அன்பர்களே இந்த வார பலன்படி, உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே எல்லாம் பிரச்சனைகளையும் சரி செய்து கொள்ள முடியும். எதிர்பார்த்த பல நல்ல செயல்கள் நடக்கும். குடும்பத்தில் ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்யம் உண்டாகும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். நண்பர்களிடம் தேவையில்லாத மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். கடன் பிரச்னைகள் தொல்லை தராமல் இருக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் .தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடும். தேவையில்லாத மனக்கவலையை அறவே தவிர்க்கவும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். பரிகாரம் : குரு பகவானை வழிப்படவும் | மகர ராசி அன்பர்களே இந்த வார பலன்படி, எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியதிருக்கும். குடும்ப நிதி நிலைமை சீரடையும். எதையும் சாதிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். இக்கட்டான நேரங்களில் கூட தைரியமாக போராடி வெற்றி காண முடியும். வெளியில் இருந்து வரும் தகவல்கள் நன்மை தரும் வகையில் இருக்கும். மதி நுட்பத்தால் எந்த பிரச்னையையும் எளிதாக சமாளிக்க முடியும். நண்பர்கள் சிலர் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. திட்டமிட்ட காரியம் ஒன்றில் திடீர் மாற்றம் வரும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். வாகனத்தில் செல்லும் போது அலைபேசியை உபயோகிக்க வேண்டாம். மனசங்கடம் வராமல் இருக்க குல தெய்வத்தை வழிபடவும். காரியத்தடை விலகும். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். உத்யோகத்தில் உங்கள் தனி திறமை வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். பரிகாரம் : சீரடி சாய் பாபாவை வணங்கி வழிப்படவும் |
கும்ப ராசி அன்பர்களே இந்த வார பலன்படி, குடும்பத்தில் கௌவரத்தை வெகுவாக உயர்த்த முடியும். வெளியிடங்களில் உங்களது வார்த்தைக்கு நல்ல மதிப்பு இருக்கும். பண கஷ்டங்கள் குறையும். வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். உங்களுக்கு எதிராக வரும் வதந்ததிகளை எப்போதும் பொருட்படுத்த வேண்டாம். வாக்கு வன்மை கூடும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைக்கவும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிரியானவர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு வரும். உடல் உபாதைகள் நீங்கும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். பரிகாரம் : நவக்கிரகத்தை தினமும் வலம் வரவும் | மீன ராசி அன்பர்களே இந்த வார பலன்படி, குடும்பத்தில் பல முக்கி முடிவுகளை எடுக்க வேண்டிவரும். எதிலும் அவசரம் இல்லாமல் நிதானமாக செயல்படவும். பண வரவு தாமதமாகும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது நல்லது. வரும் எதிர்ப்புகள் கூட தானே விலகும். தேவையற்ற கவலைகள் நீங்கும். நண்பர்கள் வகையில் விரோதம் உண்டாக வாய்ப்புணடு. உறவினர்களோடு சுமுக உறவு ஏற்படும். கடன் பிரச்சனையில் மாட்டி கொள்ளாமல் இருப்பது சிறப்பு. கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து போகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்கள் முடியாத இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். பொதுத்தொண்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்நின்று செயல்படுத்த முடியும். உத்யோகத்தில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிப்படவும் |
06 July 2025 – Sunday | முஹர்ரம் பண்டிகை | Muharram Festival
ஜூலை 2025 சுபமுகூர்த்த நாட்கள்
Date | Month | Year | Day | Pirai |
02 18 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Valarpirai வளர்பிறை |
07 23 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Valarpirai வளர்பிறை |
13 29 | July ஆனி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Theipirai தேய்பிறை |
14 30 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
16 32 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Theipirai தேய்பிறை |
ஜூலை 2025 தமிழ் திருமண தேதிகள்
Date | Month | Year | Day | Pirai |
02 18 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Valarpirai வளர்பிறை |
07 23 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Valarpirai வளர்பிறை |
13 29 | July ஆனி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Theipirai தேய்பிறை |
14 30 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
16 32 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Theipirai தேய்பிறை |
பண்டிகைகள் ஜூலை 2025 |
Jul 02 – Wed – ஆனி உத்திர தரிசனம் |
Jul 28 – Mon – ஆடிப்பூரம் |
- ஜூலை 2025 விசேஷங்கள் :
ஜூலை 01 (செ) சிதம்பரம் சிவன் தேர்
ஜூலை 02 (பு) ஆனி உத்திரம்
ஜூலை 04 (வெ) விவேகானந்தர் நினைவு நாள்
ஜூலை 05 (ச) ராமநாதபுரத்தில் தேர்
ஜூலை 06 (ஞா) மொகரம்
ஜூலை 07 (தி) கண்டமாதேவி, திருக்கோளக்குடி, கானாடுகாத்தான் சிவன் தேர்
ஜூலை 08 (செ) நெல்லையப்பர் தேர்
ஜூலை 10 (வி) சாத்தூர் பெருமாள் தேர்
ஜூலை 12 (ச) திருத்தங்கல் தேர்
ஜூலை 16 (பு) தட்சிணாயண புண்ணிய காலம்
ஜூலை 20 (ஞா) ஆடி கிருத்திகை
ஜூலை 24 (வி) ஆடி அமாவாசை
ஜூலை 27 (ஞா) ராமேஸ்வரம், திருவாடானை, நயினார்கோவில் அம்மன் தேர்
ஜூலை 28 (தி) நாக சதுர்த்தி
ஜூலை 28 (தி) ஆடிப்பூரம்
ஜூலை 28 (தி) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர்
ஜூலை 29 (செ) கருட பஞ்சமி