
லெப்.கேணல் சூட்டி
சின்னத்தம்பி இராசுசெல்வேந்திரன்
கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:26.05.1967
வீரச்சாவு: 14.07.1991
நிகழ்வு: யாழ்ப்பாணம்
வெற்றிலைக்கேணியில் கடல்வழியாகத் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
ஆனையிறவுப் பெருஞ்சமரின் ஆரம்பம்.
வெற்றிலைக்கேணிக் கரையோரம் உதவிக்குத் தரையிறக்கப்படும் சிங்களப் படையை எதிர்கொள்ளவென நிறுத்தப்பட்டிருந்த புலிகளின் சேனைக்குத் தளபதியாக, சூட்டி நியமிக்கப்பட்டிருந்தான்.
சூட்டி ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருந்தான். இரவு பகலாக எங்கள் அரண்களைச் சுற்றி சூட்டி நடந்துகொண் டிருப்பான்.
“எனது சடலத்தின் மீதுதான் எதிரி முன்னேறுவான்” என்று சொன்னான்.
14. 07. 1991 காலை.
அதிகமான நம்பிக்கையோடு அலட்சியமாக நின்ற ஒரு குழுத்தலைவனைக் கூப்பிட்டு சூட்டி சொன்னான்
*சண்டையின் முடிவில் நாங்கள் சோகத் தோடு செல்லலாம்; ஆனால் அவமானத்தோடு திரும்பக்கூடாது”.
அன்று மாலை தரையிறங்குவற்கு எதிரி இரண்டு தடவைகள் எத்தனித்தான்.
முதற்தடவை விரட்டியடிக்கப்பட்டவன்,
இரண்டாவது தடவை குண்டுமழை
பொழிந்து வந்து கரையேறினான்.
தனது அரணில் அசையாது நின்று
போராடிய சூட்டியின் சடலத்தைக் கடந்துதான், எதிரி முன்னேறினான்.
இப்போது ஆனையிறவுச் சமர் முடிந்துவிட்டது.
சூட்டி அண்ணன் சொன்னதுபோல, நாங்கள் சோகத்தோடு மட்டுமே திரும்பி வந்தோம்; அவமானத்தோடு அல்ல.
-களத்தில்