-கம்பஹா பல்லெவே-
கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 25 மற்றும் 35 வயதுடைய இருவரே சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பல்லேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரிகம-பஸ்யால பிரதான வீதியின் மல்லேஹெவ பிரதேசத்தில்13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மீரிகவிலிருந்து பஸ்யால நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ், எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார்சைக்கிளின் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த நபரும் வதுப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
25 மற்றும் 35 வயதுடைய அமிதிரிகல மற்றும் தெஹியோவிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. விபத்து சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பல்லெவேல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.