மரண அறிவித்தல்

திருமதி. மனோகரா நடராசா,
பிறப்பு- 13-01-1962 | இறப்பு 12-07-2025
மாசார் பளையை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மனோகரா நடராசா (ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் – கொழும்பு இந்து மகா வித்தியாலயம். கிளி / செந்திரேசா மகளிர் கல்லூரி, கிளி / பரந்தன் இந்து மகா வித்தியாலயம்) அவர்கள் 12.07.2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – சிவபாக்கியத்தின் பாசமிகு மகளும்,
நடராசாவின் மனைவியும்,
சர்வதன் (கனடா), பிரணவன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சௌமியா (கனடா)வின் அன்பு மாமியாரும்,
லீலாதேவி, மகாலிங்கம், தர்மலிங்கம், வசுந்திரா, சறோஜா தேவி, தேவராசா, தவராசா, தவராணி, தயாளினி, றாஜினி, சுபாஸ்கரன் மற்றும் சுபாஜினி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற சிதம்பர நாதன், கலா, கலைவாணி, சந்திர சேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15.07.2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16.07.2025 புதன்கிழமை பகல் 12.30 மணியளவில் கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணிக்கு தகனக் கிரியைகளுக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
பிரணவன் – 0778303423
சர்வதன் – 0014169302275