
வரலாற்றில் இன்று
தமிழக முன்னாள் முதல்வர் கே.காமராஜர் பிறந்த தினம்(1903) |
மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(2003) |
தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினம்(1876) |
இரண்டு வருட உருவாக்கத்திற்கு பின் அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது(1954) |
15 ஜூலை 2025 | செவ்வாய் | | |
தேதி | 31 – ஆனி – விசுவாவசு | செவ்வாய் |
நல்ல நேரம் | 07:45 – 08:45 கா / AM 04:45 – 05:45 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 10:45 – 11:45 கா / AM 07:30 – 08:30 மா / PM |
இராகு காலம் | 03.00 – 04.30 |
எமகண்டம் | 09.00 – 10.30 |
குளிகை | 12.00 – 01.30 |
சூலம் | வடக்கு |
பரிகாரம் | பால் |
சந்திராஷ்டமம் | மகம் |
நாள் | மேல் நோக்கு நாள் |
லக்னம் | மிதுன லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 20 |
சூரிய உதயம் | 06:00 கா / AM |
ஸ்ரார்த திதி | பஞ்சமி |
திதி | இன்று அதிகாலை 12:30 AM வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி இன்று இரவு 10:47 PM வரை, பின்பு சஷ்டி |
நட்சத்திரம் | இன்று காலை 07:17 AM வரை சதயம் பின்பு பூரட்டாதி |
சுபகாரியம் | சிகிச்சை செய்ய | ஆயுதஞ் செய்ய | யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள். |
இன்றைய ராசி பலன்.
மேஷம் | நஷ்டம் |
ரிஷபம் | சிக்கல் |
மிதுனம் | நன்மை |
கடகம் | சுகம் |
சிம்மம் | தோல்வி |
கன்னி | பீடை |
துலாம் | வெற்றி |
விருச்சிகம் | செலவு |
தனுசு | ஆதரவு |
மகரம் | பயம் |
கும்பம் | கவலை |
மீனம் | லாபம் |
இன்றைய ராசி பலன் | 15 ஜூலை 2025 | செவ்வாய்.
மேஷ ராசி நேயர்களே புதிய முயற்சிகள் சாதகமான பலன் தரும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும். | ரிஷப ராசி நேயர்களே குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கும். தொலைதூரச் செய்திகளால் நன்மை உண்டாகும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். |
மிதுன ராசி நேயர்களே எடுத்த காரியத்தை கச்சிதமாக முடிக்க முடியும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். பெற்றோர்களின் அன்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். | கடக ராசி நேயர்களே குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சில கெடுபிடிகள் இருக்கும். |
சிம்ம ராசி நேயர்களே குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். தன வரவுக்கான சாத்தியம் உண்டு. எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். | கன்னி ராசி நேயர்களே குடும்பத்தில் சுபீட்சம் கூடும். எதையும் முழு கவனத்துடன் செய்யவும். விமர்சனங்களைப் பொருட்படுத்த வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. |
துலாம் ராசி நேயர்களே யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். பண வரவில் ஏற்பட்ட தடைகள் அகலும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். | விருச்சிக ராசி நேயர்களே எதிர்காலம் பற்றிய யோசனை இருக்கும். பெரியவர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும். |
தனுசு ராசி நேயர்களே குடும்பத்தில் புதுமையான விஷயங்கள் நடக்கும். மன அமைதியற்ற நிலை ஏற்படும். பிரியமானவர்கள் ஆதரவாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் சீரான பாதையில் செல்லும். | மகர ராசி நேயர்களே விரும்பியது கிடைக்காவிடினும், கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. தேவைகள் நிறைவேற வழி பிறக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும். |
கும்ப ராசி நேயர்களே மனதில் இருந்து வந்த விரக்தியான எண்ணங்கள் அகலும். உறவினர்கள் வழியில் ஆதரவு பெருகும். யாருக்கும் ஜாமின் கையெழுத்திட வேண்டாம். உத்யோகத்தில் உயர்ந்த பதவி கிடைக்கும். | மீன ராசி நேயர்களே குடும்ப சுமை அதிகரிக்கும். விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வி.ஐ.பி.க்களின் தொடர்பு கிட்டும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். |
வார ராசி பலன் (14-07-2025 To 20-07-2025)
மேஷ ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குல தெய்வ பிராத்தனைகளை தாமதமின்றி நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். பிரியமானவர்கள் உதவி செய்யத் தயாராக இருப்பர். உறவினர்களால் தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாக நேரிடும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டிற்கு குடி பெயரும் வாய்ப்பு வாய்ப்பு உண்டு. பழைய கடனை அடைப்பது குறித்த யோசனை அதிகமாகும். உடல் நிலை முன்பை விட இப்போது நன்றாக இருக்கும். வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். மற்றவர்களிடம் பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவை. எதிரிகள் உங்களை கண்டு ஒதுங்கி நிற்பர். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழில், வியாபரம் வழக்கம் போல் செல்லும். பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும் | ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களால் மற்றவர்கள் பயன் பெறுவது உறுதி. எந்த ஒரு விஷயத்திலும் உடனடி முடிவுகள் என்பது சற்று சிரமத்தினைத் தரக்கூடும். குடும்ப பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவெடுத்துச் செயல்படுவது நலம். பண வரவு காரணமாக குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புது வீடு கட்டுவது தொடர்பாக தற்சமயம் முயற்சிகள் எடுக்கலாம். பிரியமானவர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத பொருள் விரையம் ஏற்படும். பொது காரியங்களில் அதிக ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் சில நேரங்களில் உங்களுக்கு விரோதமாக செயல்படலாம். பெற்றோர்களின் அறிவுரை உதவியாக இருக்கும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும். |
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் செயல்களில், வேகமும் விவேகமும் இருக்கும். முக்கிய காரியத்தில் ஏற்பட்ட முக்கிய தடைகள் நீங்கும் நீண்ட நாள் கனவு நிறைவேறும். பிரயாணம் செய்வதிலும் தனிஇன்பம் உண்டாகும். பண விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவும். நண்பர்களிடம் கொடுக்கல் வாங்கலில் மனஸ்தாபம் வரலாம். குடும்பத்தில் நன்மை தர கூடிய விஷயங்கள் நடக்கும். வாகனங்களை புதிதாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். எதிர்பார்த்த சில நல்ல விஷயங்கள் நடக்காமல் போகும். கணவன் மனைவிடையே விட்டு கொடுத்து போகவும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். தொலைதூர ஆன்மிகப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பரிகாரம் : மஹாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும். | கடக ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, எதிர்நோக்கும் முக்கிய காரியங்கள் வெற்றிபெறும். குடும்பத்தில் பொருள் சேர்க்கை ஏற்படும். உங்களது எண்ணங்களும் திட்டங்களும் செயல் வடிவம் பெரும். எதிர்பார்த்த இடத்திலுருந்து நல்ல செய்தி வரும். ஒரு சிலர் வீடு, மனை விற்று அதில் லாபம் பெறுவர். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பொருளாதார பற்றாக்குறை இருக்காது. உடல் நலத்தில் சிறு சிறு பாதிப்பு ஏற்படலாம், எனவே கவனமாக இருக்கவும். குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ளவும். உறவினர்களின் வருகையால் செலவுகள் கூடினாலும் மனமகிழ்ச்சி உண்டாகும். பிரியமானவர்களுடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் அகலும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பரிகாரம் : வராகியை வணங்கி வழிப்படவும் |
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன் படி, குடும்ப பெரியோர்களின் ஆசியால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் இனிதே நடக்கும். பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். புதிய வீட்டிற்கு இடம் மாற வேண்டிய சூழ்நிலை வரும். உங்களை சுற்றி இருப்பவர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கி சகஜ நிலைக்கு திரும்புவீர்கள். நடந்து முடிந்த விஷத்தை நினைத்து இப்போது கவலை பட்டு எந்த பயனும் இல்லை. மன நிம்மதிக்காக தினமும் தியானம் செய்வது உத்தமம். உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும். பரிகாரம் : சூரிய பகவானை வணங்கி வழிபடவும். | கன்னி ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். அடுத்தவர்களின் விமர்சனங்களைப் பற்றி கவலை பட வேண்டாம். உங்களுடைய எண்ணங்களும், திட்டங்களும் நல்லமுறையில் செயல்படும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் அனாவசிய செலவுகளை தவிர்க்கவும். குடும்ப பனி காரணமாக பயணம் செல்ல வேண்டிவரும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன் மனைவி உறவில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் ஒரு சில பிரச்னைகளை சந்திக்க நேரலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு தோன்றி மறையும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கி வழிபடவும் |
துலாம் ராசி நேயர்களே, இந்த வார ராசி பலன் படி, குடும்ப பிரச்சனைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வு கிடைக்கும். இது வரை பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைக்க போகிறது என்று தான் சொல்ல வேண்டும். அடுத்தவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கியிருப்பதும் கூடாது. குடும்பத்தில் சொல்லும்படியான காரியங்கள் பல நடக்கும். செலவுகள் ஓரளவு சமாளிக்கும் படி இருக்கும். பெற்றோர் உடல் நலத்தில் கவனம் தேவை. கடன் பிரச்சனை படி படியாக குறைய தொடங்கும். மேற்கொண்டு கடன் வாங்க வேண்டிய சூழல் இருக்காது. வாழ்க்கைத்துணை உங்கள் வெற்றிக்குத் துணை நிற்பார். உறவினர்களிடையே இருந்து வந்த மன கசப்பு நீங்கும். சொத்து விவகாரங்களில் இருந்த பிரச்னைகள் அகலும். உத்யோகத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும் | விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பொதுக்காரியங்களில் உங்களின் செயல்பாடுகள் சிறப்பான கௌரவத்தினைப் பெற்றுத் தரும். மனக்கவலைகள் அனைத்தும் மறையும். புதிய வீடு, மனை வாங்க வேண்டும் என்ற திட்டம் விரைவில் நிறைவேறும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சீராகும். கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் உண்டாகும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. புதிய நண்பர்களின் இணைவினால் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வாகன பயணத்திலும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்ல பலனை தரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும். பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும். |
தனுசு ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகளை ஏற்பட்டாலும், அதை எளிதாக சரி செய்து கொள்ள முடியும். உங்களிடம் மனோதைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். திருமணத்தில் இருந்த தடை நீங்கும். எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசவும். குடும்பத்தில் பணவரவு நன்றாக இருக்கும். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். நெருங்கிய உறவினர்களுடன் சுமுக உறவு காணப்படும். புது வீடு மாற்றம் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வாழ்க்கைத்துணையின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது அவசியம். நண்பர்களோடு வீண்விவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் எதிர்பாரா மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் விரிவாக்க்கம் ஏற்படும். பரிகாரம் : சாய் பாபாவை வணங்கி வழிபடவும். | மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்க முடியும். வீட்டில் சுப நிகழிச்சிகள் நடைபெறுவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரித்து காணப்படும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் ஒன்றை வாங்க முடியும். உடல் நலம் சீராகும், இருப்பினும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களால் பொருளாதார ரீதியான பிரச்னையை சந்திக்கக் கூடும். . கணவன் மனைவி உறவில் நல்ல ஒற்றுமை இருக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்ற கூடுதலாக செலவழிக்க நேரிடும். உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் உருவாகும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். சிறிய முதலீட்டில் புதிய தொழிலை ஆரம்பிக்கலாம். பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவு |
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வாக்கு வன்மையால் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் விரும்பியது போல் எல்லாம் நல்ல முறையில் நடக்கும். ஓயாத அலைச்சல் காரணமாக உடல், சோர்வும் அசதியும் ஏற்படும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு பின் சீராகும். ஏற்கனவே வாங்கிய கடனை அடைப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு. எதிர்பார்த்து நல்ல செய்தி காதில் வந்து விழும். மனதில் சந்தோஷமும், தெம்பும் அதிகரிக்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். கணவன் மனைவிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும், அதை பேசி சரி செய்து கொள்ள முடியும். பெற்றோர்கள் வழியில் சகாயமும், ஆதரவும் அதிகமாகும். தெய்வ பிராத்தனைகளை நிறைவேற்ற முடியும். உத்யோகத்தில் எதிர்பாராத திருப்புமுனை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும் | மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் சிறிது சரிவினைச் சந்திக்க நேரலாம். திட்டமிடாத செலவுகள் நிறைய வரும். அக்கம் பக்கம் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தேவையில்லாத வீண் செலவுகளும் ஏற்படும். யாரிடத்திலும் வீண் விவாதம் செய்ய வேண்டாம். மற்றவர்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு. கடன் கொடுக்கல் வாங்கலை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். உங்களிடம் விவாதம் செய்தவர்கள் கூட விலகி நிற்பர். புதிய இடத்தில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும். பரிகாரம் : நவகிரகத்தை தினமும் 9 முறை சுற்றவும். |
06 July 2025 – Sunday | முஹர்ரம் பண்டிகை | Muharram Festival
ஜூலை 2025 சுபமுகூர்த்த நாட்கள்
Date | Month | Year | Day | Pirai |
02 18 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Valarpirai வளர்பிறை |
07 23 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Valarpirai வளர்பிறை |
13 29 | July ஆனி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Theipirai தேய்பிறை |
14 30 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
16 32 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Theipirai தேய்பிறை |
ஜூலை 2025 தமிழ் திருமண தேதிகள்
Date | Month | Year | Day | Pirai |
02 18 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Valarpirai வளர்பிறை |
07 23 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Valarpirai வளர்பிறை |
13 29 | July ஆனி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Theipirai தேய்பிறை |
14 30 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
16 32 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Theipirai தேய்பிறை |
பண்டிகைகள் ஜூலை 2025 |
Jul 02 – Wed – ஆனி உத்திர தரிசனம் |
Jul 28 – Mon – ஆடிப்பூரம் |
- ஜூலை 2025 விசேஷங்கள் :
ஜூலை 01 (செ) சிதம்பரம் சிவன் தேர்
ஜூலை 02 (பு) ஆனி உத்திரம்
ஜூலை 04 (வெ) விவேகானந்தர் நினைவு நாள்
ஜூலை 05 (ச) ராமநாதபுரத்தில் தேர்
ஜூலை 06 (ஞா) மொகரம்
ஜூலை 07 (தி) கண்டமாதேவி, திருக்கோளக்குடி, கானாடுகாத்தான் சிவன் தேர்
ஜூலை 08 (செ) நெல்லையப்பர் தேர்
ஜூலை 10 (வி) சாத்தூர் பெருமாள் தேர்
ஜூலை 12 (ச) திருத்தங்கல் தேர்
ஜூலை 16 (பு) தட்சிணாயண புண்ணிய காலம்
ஜூலை 20 (ஞா) ஆடி கிருத்திகை
ஜூலை 24 (வி) ஆடி அமாவாசை
ஜூலை 27 (ஞா) ராமேஸ்வரம், திருவாடானை, நயினார்கோவில் அம்மன் தேர்
ஜூலை 28 (தி) நாக சதுர்த்தி
ஜூலை 28 (தி) ஆடிப்பூரம்
ஜூலை 28 (தி) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர்
ஜூலை 29 (செ) கருட பஞ்சமி