

தாக்குதல் தளபதி
லெப்டினன்ட் சீலன் (ஆசீர்)
ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி
புனிதமரியாள் வீதி, திருகோணமலை
11.12.1960 – 15.07.1983
15.07.1983 அன்று மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின் போது ஏற்பட்ட சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு.

15.07.1983 அன்று யாழ். மாவட்டம் மீசாலைப் பகுதியில் துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சிறிலங்கா இராணுவத்தினரின் முற்றுகையில் ஏற்பட்ட மோதலில் நெஞ்சில் குண்டுபாய்ந்த வேளையில் எதிரியிடம் தான் உயிருடன் பிடிபடக்கூடாது எனவும், துப்பாக்கியை பாசறையில் ஒப்படைக்கும் படியும் கூறி தோழன் கையில் இருந்த சுடுகலனைக் கொண்டு தம்மை சுடுவித்து, வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் தளபதியும், தமிழீழ தேசியத் தலைவரின் உற்ற தோழனுமாகிய லெப்டின்னன்ட் சீலன் / ஆசீர், வீரவேங்கை ஆனந் ஆகிய மாவீரர்களின் 42’ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
“ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது.” இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும்.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
லெப். சீலன், வீரவேங்கை ஆனந் வீரவணக்க நாள் இன்றாகும்