
துரோகத்தின் தூசியில் விளையாடும்,
காட்டிக் கொடுப்பதையே கர்மமெனும்,
அரசியல் கொள்ளையில் ஆடலாடும்,
கொலைகாரன் கோலத்தில் நின்றாடும்…
எங்கே போனது நியாயம் எனும் நிழல்?
எங்கே மறைந்தது நேர்மை எனும் மழை?
நாணமற்ற முகங்களில் விழிகள் சுடும்,
நடுவெளியில் சத்தமின்றி உண்மை சுருணும்.
வஞ்சகரைக் கொண்டாடும் காலம் இது,
வெற்றிமிகு வீழ்ச்சியின் வேடம் இது,
வாழ்வதற்கே இப்போது வெட்கம் வரும்,
வெளிச்சத்தில் இருள் கூட வெட்கி ஒளியும்…
என்ன தவம் செய்தோம் இவ்விதம் வாழ?
இருட்டின் கையில் விழியாய்த் துயரமழ?
பழி பாரமென ஏந்தும் இந்நாட்டில்,
பரிசு துரோகிக்கு, பண்பு வீழ்ச்சிக்கே!
எழுதியவர்: ஈழத்துத் நிலவன்.
