|| காங்கேசன்துறை
கடற்புலிகளின் மூன்று படையணிகள் உள்ளடக்கிய அணி காங்கேசன்துறை துறைமுகத்தினுள் அதிகாலை 1.00 மணிக்கு ஊடுருவி குடா நாட்டுப் படைகளுக்கு ஆயுத தளபாடம் விநியோக மையமாக இருந்த காங்கேசன்துறை கடற்படை தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டதில் சிறிலங்கா அரசுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தி வரலாற்று சரித்திர களமாகியது அன்றைய சமர்.

ஐந்து மணி நேர கடும் சமரில் கடற்கரும்புலி மேஜர் தங்கன், கடற்கரும்புலி மேஜர் செந்தாளன், கடற்கரும்புலி கப்டன் தமிழினி ஆகிய கடற்கரும்புலிகள் தமது இன்னுயிர்களை ஈர்ந்து கடலன்னை மடியில் வீரகாவியமாகினர்.

கடற்கரும்புலி
மேஜர் தங்கம்
வீரய்யா மயில்வாகனம்
பிட்டமாறுவ, பதுளை, சிறிலங்கா
வீரப்பிறப்பு: 01.01.1975
வீரச்சாவு: 16.07.1995
16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா கட்டளைக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.

கடற்கரும்புலி
மேஜர் செந்தாளன் (நியூட்டன்)
பிரான்சில் டக்ளஸ்
பசையூர், குருநகர், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 17.11.1974
வீரச்சாவு: 16.07.1995
16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா கட்டளைக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.

கடற்கரும்புலி
கப்டன் தமிழினி
சிவப்பிரகாசம் கனிமொழி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 30.12.1974
வீரச்சாவு: 16.07.1995
16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா கட்டளைக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு


பூநகரிச் சமரின்போது நாகதேவன்துறையில் கைப்பற்றிய விசைப்படகு ஒன்றும் மூழ்கிப்போனதால் கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப். கேணல் நரேஸ், கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி லெப். கேணல் மாதவி உட்படகடற்புலிப் போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”