சென்னை
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, ராஜ்யசபா எம்.பி.க்களாக உள்ள, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, பா.ம.க., தலைவர் அன்புமணி, தி.மு.க.,வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, அ.தி.மு.க.,வை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரின் பதவி காலம், வரும் 24-ல் முடிவடைகிறது.

அவர்களது இடங்களுக்கு, கடந்த மாதம் நடந்த ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., சார்பில் கமல், வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோரும், அ.தி.மு.க., சார்பில், தனபால், இன்பதுரை ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.
வரும் 25ல் ராஜ்யசபா எம்.பி.,யாக, கமல் பதவி ஏற்பார் என, ம.நீ.ம., கட்சி தலைமை அறிவித்துள்ளது.
