பாரிஸ், பிரான்ஸ்
பிரான்ஸ் தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான பொன்டியில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.




இந்த நிகழ்வில் பொன்டியின் மேயர் ஸ்டீபன் ஹேர்வே கலந்துகொண்டு நினைவுச்சுடரை ஏற்றிவைத்தார்.
தமிழ்மக்களின் இலட்சியத்திற்கு அன்டன் பாலசிங்கம் ஆற்றிய சேவைக்காக அவரின் சிலையை அமைப்பதற்கு பொன்டி நகர பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொன்டியில் உள்ள மாநகர பூங்காவில் இந்த சிலை உருவாகவுள்ளது.