
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா
16.07.2025
பிரித்தானிய தமிழீழத் தமிழ் உறவுகளே!!!!
வணக்கம்.
எமது தமிழீழத் தேசத்தின் தாய்மடியிலே, முன்னைத்தமிழ் வீரமரபொன்றின் விழுதாகி, இயற்கையின் விருப்பிலும், நேசிப்பிலும் உவந்தளிக்கப்பட்ட வரலாற்றுப் பேறாகவந்துதித்த தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் என்றஉன்னதரின் வருகையும், அதன் பின்னரான தமிழினத்தின்கூட்டுப் பண்புருவிலிருந்து மிகத்துல்லியமாக முன்மாதிரியாகத்திகழத் தொடங்கிய இளம்பராயத் துடிப்பாற்றலும், மண்ணினதும் மக்களினதும் மொழியினதும் நேர்கொண்டஉண்மையான நேசிப்புமாக, வரலாற்றைத் தானே உருவாக்கத்தொடங்கிய நாளிலிருந்து, இன்றுவரையும் இனி என்றென்றும்பேரொளியாக வழிகாட்டி, தமிழீழ விடுதலைக்கானதிசைநோக்கி எம்மை நகர்த்தும் மேதகு என்ற வாழும்சித்தாந்தத்தை ஒரு சிறிய தீபமேற்றி அணைத்துவிட முடியாது.
தமிழீழ விடுதலையென்ற இலட்சியக் கனவைச் சுமந்தபடி, தொடர்ச்சியான காலமாற்றக் கடமைகளைத் தடம் மாறாதுசுமந்து பயணிக்கும் ஒவ்வொருவரது பாதங்களையும் அடித்துச்சிதைத்துவிட வேண்டுமெனவும், அதன் அச்சத்தால்இலட்சியத்தைக் கைவிட்டு, இடைநடுவிலே போட்டுவிட்டுவெறுமைக்குள் இருக்க வேண்டுமென சிங்களப்பேரினவாதிகளும், வல்லாதிக்கப் போட்டியாளர்களும் கனவிலேமிதக்கின்றார்கள். அவர்களுடைய கனவுகளுக்குஉருவேற்றிவிடத் துடித்து, அதனைத் தமிழீழத் தேசத்துஇதயத்திலேயே அரங்கேற்றிவிடவும் எதிரிகளால்உருவாக்கப்பட்ட தமிழின விரோதக்குழுக்கள் வரிந்துகட்டிவலம்வருகின்றார்கள்.
எமது தமிழீழத் தாய்மடியின் விடுதலைக்கான பேரவாக்களை, உணர்வுகளாலும், பொருளாதார மேலீட்டாலும் தம்மாலானகொள்ளளவுப் பருமனையும் தாண்டி எவ்வளவு தார்மீகமாகஅள்ளிச் சுமக்க முடியுமோ அவ்வளவாகத் தாங்கிச் சுமந்தபிரித்தானிய தேசவாழ் மக்களானாலும் சரி, அதேபோன்றுஉலகவாழ் தமிழீழத் தமிழ் மக்களானாலும் சரி, இந்தசூழலைத்தெளிவாக விளங்கிக்கொண்டு,சுவிற்சர்லாந்து நாட்டிலே சிலகுழுக்களால் நிகழ்த்தவிருக்கும் மேதகுவிற்கான விளக்கேற்றல்நிகழ்வினைத் தார்மீகமான பண்புகளோடு புறக்கணிக்குமாறுஉரிமையோடும், உறுதியோடும், உளவேதனையோடும் வேண்டிக்கொள்கின்றோம்.
தமிழர்களின் விடுதலைப் பாதையென்பது, மேதகுவின் அறம்நிறைந்த வழிகாட்டுதலில் எத்தகைய உயரிய தியாகங்களின்கனதியாலும், எமது மக்களது அசைக்க முடியாத உறுதியாலும்செப்பனிடப்பட்டிருப்பதை எதிரிகளால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அச்சிறந்த செப்பனிடல் முள்ளிவாய்க்கால்தாண்டியும் பதினாறு வருடங்களாக நிலைத்திருப்பதைஅவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பத்தோடுபதினொன்றாக எமது கட்டமைப்புகளையும், பண்பாடுகளையும்வீதிக்கு இழுத்துவிடத் துடிக்கும் பல்வேறுபட்ட சுயநலஈனச்செயல்களைப் பிரித்தானிய தேசம் சந்தித்துக்கொண்டேஇருந்தாலும், தடம் மாறாத தமிழர்களாக, விலைபோகாதமக்களாக வழிநடக்கின்றோமென்றால், அங்குதான் மேதகுவின்சித்தாந்தங்களும், கோட்பாட்டு அலகுகளும் எம்மைவழிநடாத்துகின்றன என்பதை மீண்டும் மீண்டுமாகநினைவிருத்துவோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலம் தாங்கி, அந்த நெருப்பாற்றுப்பெருவெளியிலே தீக்குளித்துக் கரையேறிய நாள்முதலாய், எமதுவரலாற்றுப் பேரியக்கம் மெல்ல மெல்ல ஆனால், உறுதியாகக்கட்டிக்காத்த தமிழீழம் என்ற உன்னத இலக்கை எதிரிவிலைபேசத் தொடங்கியபோது, தம்மையறியாமலேயே அந்தநயவஞ்சக வலைக்குள்ளே விழுந்தவர்களும், சுகபோகங்களுக்காக விருப்புணர்ந்து இணைந்துசெயற்படுபவர்களுமாக பலரும் தம்மையிழந்து நிற்கின்றபோதிலும், மண்ணுறங்கும் மாவீரர்களது வல்லமையோடும், மேதகுவின் வாழும் சித்தாந்த வழிகாட்டுதலோடும், இன்றும்நம்பிக்கையும் விடுதலை உணர்வும் குன்றாத மக்களாகஇருக்கின்றோமென்றால் அந்த ஓர்மத்தை எதிரி அழித்துவிடவேதிட்டமிடுவான் என்பதிலே சந்தேகமில்லை. இந்தப்புரிதல்களினூடாக யாரோ திட்டமிடும் விளக்கேற்றலைஅறிந்தும் அறியாததுமான மக்களாக இல்லாமல் தெளிந்தேஉறுதியாகப் புறக்கணிப்போம்.
அமைதிப்படை என்ற போர்வையிலே, அரிசிப்பொதிகளோடுஈழநிலத்திலே காலடிவைத்த இந்திய வல்லாதிக்க அரசு எமதுபோராட்டத்தையும் தேசியத்தலைவரையும் அழித்துவிடஎவ்வளவு சதிகளையும் கொடுமைகளைப் புரிந்தார்களென்பதைவரலாற்றின் கறுப்புப் பக்கங்களாகப் பாரத தேசம் வெட்கிநிற்கும் பக்கங்கள் உண்டு.
1989 ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் 02 ஆம் நாள் தமிழீழதேசியத்தலைவரது சொந்த ஊரான வல்வை மண்ணிலேநிகழ்த்திய வல்வைப் படுகொலை, மற்றும் அதே மாதங்களிலேநிகழ்த்திய படுகொலைகள், மணலாற்றுக் கானக வாழ்வில்இந்திய வல்லாதிக்கத்தை எதிர்த்துநின்ற மேதகுஇறந்துவிட்டாரென ஏற்படுத்திய பொய்ப் பரப்புரைகள்இவற்றையெல்லாம் ஒரு நேர்கோட்டு வரைபிலே விளக்கேற்றல்காலத்தோடு ஒப்புநோக்கிப் பார்க்க வேண்டியும், இதன்பின்னால் யார் உள்ளார்கள் எனவும் மக்கள் மனங்களிலேசந்தேகம் இயல்பாக எழுவதைத் தவிர்க்க முடியாது.
ஏற்பாட்டாளர்களென பிரித்தானிய தேசத்திலிருந்தும் கூவும்பலரும், மேதகுவிற்கு விளக்கேற்றிவிட்டு அதிலிருந்து ஒரு புதியபொருத்தமற்ற வரலாற்றுத் தொடர்ச்சியைக் கையிலெடுக்கத்திட்டமிடுவதும், தமிழினத்திற்கு புதிய தலைமைத்துவஏற்பாடுகளைப் பற்றிச் சிந்திப்பதும், சிறுபிள்ளைத்தனமானதுஎன்பதை மக்கள் நன்கு உணர்வார்கள். இலையுதிர்த்துப் புதியதளிர் கொள்ளும் இயற்கை விதிசொல்லும் கதையல்லமேதகுவின் சித்தாந்தம். அந்த இயற்கையையே நண்பனாகக்கொண்ட முன்னைத்தமிழ் வரலாற்றையும், நிகழ்காலத் தமிழர்வாழ்வுரிமையையும் கூட்டிணைத்து வழிகாட்டும் எதிர்காலச்சுதந்திரமான தேசமதின் இயற்கைப் பேரொளி என்பதைஉணரத் தவறுகின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் போர்வெளி தாண்டிப் பதினாறு வருடங்களாக“நிவாரணம்” என்ற சொல்லைத்தாண்டி ஏனைய எதற்குமேதகுதியற்ற இருப்புக்குள் தமிழினத்தை அமிழ்த்தி வைத்திருக்கத்துடிக்கும் சிங்களப் பேரினவாத கட்டுக்களை உடைத்துத்தன்னெழுச்சியாக மேலெழும் மக்கள் போராட்டங்கள் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியும்கொல்களங்களாகவும் புதைகுழிகளாகவும் அடையாளப்படும்இடங்கள் நோக்கித் திரட்சி கொள்கின்றார்கள். மக்களுக்கானதன்னெழுச்சியின் மூலக்கூற்றுப்பலம் தொடுபடுகின்றபுலம்பெயர்ந்த உறவுகளையோ அவர்கள் மூலமான உலக நீதிபெறுதலையோ தடுத்துவிட சிங்களதேசம் எங்கெல்லாம்ஆதிக்கக் கரத்தை நீட்டுகின்றது என்பதிலே உறுதியாகஇருப்போம்.
பிரித்தானிய வாழ் சொந்தங்களே! நிதானிப்போம்!!
மேதகுவிற்கு விளக்கேற்றிவிட்டு, முற்றுப்புள்ளி மூலமாகதமக்கான நிறைவைக்காணத் துடிக்கும் சிலரைப் போன்றே, தலைவர் வருகிறார், மகள் வந்துவிட்டார், பொட்டம்மான்வரப்போகின்றார் என்றெல்லாம் நிதிசேர்ப்பு வேட்டையிலும்பிரித்தானிய மண்ணிலிருந்தும் தொடர்புபட்டிருப்பவர்களைஎமது மக்கள் இனங்காணாமலில்லை. மனச்சான்றுகளைவிற்றுப் பிழைப்போரை இயற்கை தன் குற்றக் கூண்டிலேநிறுத்தித் தண்டிக்குமென்பதிலே ஐயமில்லை.
தமிழீழம் என்ற தனித்துவமான இலட்சியக் கனவைவரித்துக்கொண்ட நாம், தொடர்ந்தும் அதற்காகவே வழிகாட்டும்மேதகுவின் சிந்தனையின் வழித்தடத்திலே பயணிப்போமெனஉறுதிகொள்வோம். சுதந்திரமான தேசத்தை சுவீகரித்து, பட்டொளிவீசி அசைந்தாடும் தமிழீழத் தேசியக்கொடியின்அசைவிலே, அந்நாளில் பூமிப்பந்தில் தமிழர் நாம்பேரெழுச்சியோடு ஆர்ப்பரிப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
நன்றி,
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா.



