திருவனந்தபுரம்
நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து துறைகளிலும், ஏ.ஐ., தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேநேரத்தில், ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக மொழி பெயர்க்கப்படுவது தவறாக இருக்கிறது என்று குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. இந்நிலையில், ஏ.ஜ., பயன்பாடு தொடர்பாக நீதிமன்ற அலுவலர்களுக்கு கேரளா ஐகோர்ட் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
* நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது.
* நீதிமன்றம் உத்தரவுகளை மொழிபெயர்க்க சாட் ஜிபிடி உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தக் கூடாது.
* வழிகாட்டுதல்களை மீறி நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்க ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ.,) பயன்படுத்துவது குறித்து போதிய பயிற்சி அவசியம். உயர்நீதிமன்றம் அங்கீகாரம் பெற்ற ஏ.ஐ., செயலிகளை பயன்படுத்த வேண்டும்.
* வழக்கு தொடர்பான வேறு ஏதும் முக்கிய ஆவணங்களில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
* ஏ.ஐ., தொழில் நுட்பம் நன்மை பயக்கும் என்றாலும், அவற்றின் கண்மூடித்தனமான சில செயல்பாடுகள் பாதிப்பை உருவாக்கும். இதனால் நீதித்துறை அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது, இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.