21.07.2025 அன்று பெல்சியம் அன்ற்வேற்பனில் தமிழீழத்தேசிய மாவீரர் நினைவு சுமந்த மென் பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இடம் பெற்றது.

இன்றைய நவீன உலகத்தில் புலம் பெயர் தேசத்தில் இளையோர் பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளாமல் இணையத்தில் அதிக கூடுதலான நேரத்தை செலவிடுவதாலும் ,அதிக வேலை சுமையாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி ஆரோக்கியமற்ற சமூகமாக மாறிக்கொண்டு வருகின்றது.
தமிழீழ விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களுடைய கனவையும், இலட்சியத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு இன்றைய இளையோர்களாகிய எங்களின் உறவுகளின் கையிலேயே தங்கியிருப்பதால் ஆரோக்கியமுள்ள சமூக பொறுப்புள்ள இளையோர் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தார்மீக பொறுப்பை கருத்தில் கொண்டு வருடம் தோறும் மாவீரர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி தமிழ் இளையோர்கள் இடையே பெல்சியத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நடாத்தப்பட்டு வருகின்றது.
வழமை போன்று இவ்வாண்டும் சிறப்பான முறையில் முதன்மை நிகழ்வானபொதுச்சுடர் ஏற்றல்,தமிழீழத்தேசியக்கொடி
ஏற்றல் மற்றும் வழமையான நிகழ்வுகளுடன் ஆரம்பித்த துடுப்பாட்ட போட்டினது சிறப்பான முறையில் நடைபெற்று நிறைவாக தமிழீழத்தேசியக்கொடி கையேந்தலுடன் “தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ” என்னும் தாரக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.





