இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து, 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் துவங்குகிறது. இதில், இந்தியா கட்டாயம் வெல்ல வேண்டும்.
இந்த நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் விளையாடும் இந்திய அணி 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சனும், ஆகாஷ் தீப், நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக, அன்சுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, இங்கிலாந்து அணியில் கடந்த போட்டியில் காயமடைந்த பஸிருக்கு பதிலாக டவ்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் இடம்பிடித்துள்ளார்.
இதுவரை மான்செஸ்டர் மைதானத்தில் இந்தியா 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், ஒரு போட்டியில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை. அதேபோல, இங்கிலாந்து அணி 20 போட்டிகளில் 2ல் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. 14 ஆட்டங்களில் வெற்றியும், 4ல் டிராவும் செய்துள்ளது.