யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை கண்டன போராட்டம்.
கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு ஜூலை 23, 1983 தொடக்கம் ஜூலை 29 வரை திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் தமிழர்களை கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும், 3000 பேர் வரை படுகொலை செய்யப்பட்ட ஒரு பெரும் தமிழின அழிப்பை நிகழ்த்திய கோரமான நிகழ்வாகும். இன்றோடு 42 ஆண்டுகள் கடந்தோடிவிட்டது.
தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கறுப்பு யூலை நாளை நினைவு கூர்ந்தனர்.
ஆவண நிழற்படக் காட்சிப்படுத்தலும் வேற்றின மக்களுக்கான துண்டறிக்கைகளும் வழங்கப்பட்டன.











