“கறுப்பு யூலை” நிகழ்வு காலங்கள் கடந்தாலும் தமிழர்களின் மனதில் ஆறாத காயங்களையும், தீராத வலிகளையும் தமிழர்கள் மனதில் கிளறிக் கொண்டேயிருக்கும்.

சிங்களப் பேரினவாத அரசு ஆயிரக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்த 1983-ம் ஆண்டின் கறுப்பு ஜூலையும், இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த 2009-ம் ஆண்டும் என்றென்றும் தமிழர்கள் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள்.
கறுப்பு யூலை தமிழின அழிப்பு 42 ஆவது ஆண்டு நினைவு நேற்றைய தினம் புதன்கிழமை (23.07.2025 ) வட தமிழீழம், யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நினைவேந்தப்பட்டது.
யாழ் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.


