பெல்சியத்தில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் நாள் 2025

தமிழ் தேசிய இனத்தின் ஆறாத வடுக்களாக இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் இன அழிப்பு நாளான கறுப்பு யூலையின் 42ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பெல்சியத்தில் பல்லின மக்கள் கூடி வாழ்கின்ற அன்ற்வேற்பன் மாகாணத்தில் 23.07.2025 உணர்பூர்வமாக நினைவேந்தல் செய்யப்பட்டது.

23.07.1983ஆம் ஆண்டு தென்னிலங்கையில் தமிழ் மக்கள் கூடி வாழ்ந்த இடங்களில் சிறீலங்கா அடக்குமுறை அரசானது திட்டமிட்ட முறையில் சிங்கள காடையர்களை ஏவி தமிழ் மக்களின் மேல் கொடூரமான இன அழிப்பை மேற்கொண்டது. இக் கொடூரமான இன வெறி ஆட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு, வீடுகள் , வணிக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டு ,உடமைகள் சூறையாடப்பட்டு மீதமுள்ள தமிழர்கள் அடித்துத் துரத்தப்பட்டனர் .

இதன் தொடற்சியாக தமிழர் தாயகப் பிரதேசங்களில் திட்டமிட்ட முறையில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் வன்வலைப்பு செய்யப்படுவதும் ,அத்துமீறி தமிழர் தாயகப்பிரதேசத்தில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதும், பௌத்த விகாரைகள் கட்டப்படுவதும், தமிழ் இளையோர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவதும் , தமிழ் கலாச்சாரங்களைச் சீர்குழைத்து தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்றியமைக்கும் திட்டமிட்ட இனவழிப்பு தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

நடாத்தபட்ட இன அழிப்பிற்கான சர்வதேச நீதி விசாரணை வேண்டியும். தொடரப்படுகின்ற இன அழிப்பை நிறுத்தக்கோரியும். கறுப்பு யூலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் முகமாக நினைவேந்தல் அகவணக்கத்துடன் நினைவு கூறப்பட்டு , பல்லின மக்களிற்கு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டு , இன அழிப்பை சித்தரிக்கின்ற பதாதைகளும் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு நிறைவாகத் “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்னும் தாரக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.


