போதை மாத்திரைகள் வைத்திருந்த மியான்மர் நாட்டவர் கைது செய்யப்பட்டார்.

மிசோரம் மாநிலத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பும், அசாம் ரைபிள்ஸ் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உளவுத்துறை தகவலின் அடிப்படையில், மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள சோட் கிராமத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது மிசோரமின் கிழக்கு சாம்பாய் மாவட்டத்திலும் தேடுதல் வேட்டை நடந்தது. இதில், ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் அவரிடம் இருந்து ரூ.3 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 1.11 கிலோ மெத்தம் பெட்டமைன் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து மெத்தம் பெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த நபர் மியான்மர் நாட்டவர் என்று அறியப்பட்ட நிலையில், அவரையும், போதைப்பொருட்களும் உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.