அன்பான கனடா வாழ் உறவுகளே,
நாம் சுதந்திரமடைந்து சுயநிர்ணயத்தோடு வாழ வேண்டும் என்ற எம் அனைவரின் வேணவாவினை தத்துவ, கோட்பாட்டு, வரலாற்று அடிப்படையில் சுமந்து வந்திருக்கும் “தன்னுரிமையும் தனியரசும்” நூலின் அறிமுக நிகழ்வு.

காலம்: 02-08-2025 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 4.30 மணி
இடம்: தமிழ் இசைக் கலாமன்றம் ஒன்ராறியோ,
1120, Tapscott Road,
Units 3,4,and 5,
Scarborough On,
புலம்பெயர் உறவுகள் வழங்கும் தாயக எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள், மற்றும் நூல் ஆய்வு உரைகளும் நடைபெற உள்ளன.
“தனித்துவமான ஒரு மொழி, பண்பாடு, வரலாறு, நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு தாயக நிலம், இன அடையாள உணர்வு போன்ற பண்புகளை உடையவர்கள் என்பதால் எமது மக்கள் ஒரு தேசிய இனமாக, ஒரு மக்கள் சமூகமாக அமைந்துள்ளனர். ஒரு தனித்துவமான மக்கள் சமூகம் என்ற ரீதியில் எமது மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள்.
தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில் அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி, சுதந்திரமாக, கெளரவமாக வாழ விரும்புகிறார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகிறார்கள். இதுவே எமது மக்களின் அபிலாஷை”
(தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 2002ம் ஆண்டின் வரலாற்று மாவீரர் நாள் உரை)
அனைவரையும் அன்புடன் அழைகின்றோம்.
நூலாசிரியர்
சுதந்திர வேட்கை பதிப்பக செயற்பாட்டாளர்கள்.