கனடிய மண்ணில், வெள்ளிக்கிழமை, யூலை 25, 2025 மாலை 6:30 க்கு கறுப்பு யூலை 2025 நிகழ்வு கனடியத் தமிழர் சமூகம் மாணவர் சமூகம் ஒழுங்கமைப்பில் எழுச்சியாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் 1983 யூலையில் படுகொலையான தமிழ் மக்களிற்கு மலர் தூவி பொதுச்சுடரேற்றி வணங்கியதோடு, செம்மணியில் படுகொலையாகி இப்பொழுது உடல் எச்சங்களாக வெளிக் கொண்டுவரப்பட்டு உறுதியான இனப்படுகொலைச் சாட்சியங்களாக போராடும் வல்லமை கொண்டனவாக மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகளிற்குரிய கொடூரமாகப் புதையுண்ட தமிழ் மக்களிற்காகவும் ஒளி விளக்கேற்றி நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது.
சிறப்புரைகள் ஆற்றிய பலருள் செம்மணி இனப்படுகொலைகளின் நேரடி சாட்சிகளில் ஒருவரான அருட்தந்தை பெர்னார்ட் அவர்கள் சிறப்பாக உரையாற்றினார்.
சிறப்புரைகள், எழுச்சிக்கலை நிகழ்வுகளோடு எழுச்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஈற்றில் “இனியும் ஓயோம்! போராடுவோம்!” எனும் பொருளௌடு வருகை தந்த மக்கள் ஒளி ஏந்த உறுதிமொழி எடுத்து நிகழ்வு நிறைவிற்கு வந்தது.
நன்றி – சிவவதனி பிரபாகரன் | கனடா

























































