யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழிகளில், இன்று ஞாயிற்றுக்கிழமை (27.07.2025) 5-புதிய எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இன்று புதிதாக எலும்புக்கூட்டு தொகுதிகள் எதுவும் அடையாளம் காணப்படாத நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 தொகுதிகள் அகழ்ந் தெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 7 நாட்களில் மட்டும் 30 தொகுதிகள் முற்றாக அகழ்ந் தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வுகள், நீதிமன்றத்தால் “தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இல – 01” மற்றும் “இல – 02” என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 22வது நாளாக பணி முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 7 நாட்களில் 36 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 101 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 95 தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகளுடன் இருந்த ஒரு பொலித்தீன் பை, மேலதிக ஆய்விற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று புதிதாக எலும்புக்கூட்டு தொகுதிகள் எதுவும் அடையாளம் காணப்படாத நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 7 நாட்களில் மட்டும் 30 தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.