நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு
மாவீரர் துயிலுமில்லம் – ஆலங்குளம்
சம்பூர் | திருகோணமலை | திகதி 01.08.2025
ஊடக அறிக்கை
உயிர்ப்பூவைக் கிள்ளி எறிந்து விட்டு யாரும் ஈழத்தமிழினத்தின் வரலாற்றுத் துரோகிகளாகவும் மனநோயாளிகளாகவும் மாறிவிட வேண்டாம்.
இலங்கைத்தீவில் மகாவம்ச மனநிலையுடன் வாழுகின்ற சிங்கள இனத்துக்கு இருக்கின்ற அதே இறையான்மையும் உரிமையும் தமிழர்களுக்கும் இருக்கின்றது. இந்த சமநிலையில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக, எல்லாள மன்னனின் மறைவினைத் தொடர்ந்து நீண்ட கால இடைவெளியின் பின்னர், இலங்கையினை மட்டுமன்றி பூமியில் தழிழர்களின் வீர வரலாற்றைப் பறைசாற்றிய ஒரு ஒப்பற்ற பெருந்தலைவராக மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இந்த நொடி வரை உயிர்ப்போடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
தழிழினத்தை வழிநடத்திக் கொண்டிருக்கின்றார். என்பதுவே நிதர்சனமான உண்மையாகும். எல்லாள மன்னனுக்கு அவர் வீர மரணமடைந்த அனுராதபுர மண்ணில் அமைக்கப்பட்டிருக்கின்ற கல்லறை அருகிலேயே எமது தலைவர் தன் தாயின் வயிற்றில் கருவாக அவதரித்தார் என்கின்ற உண்மை பன்னெடுங்காலமாக தமிழினத்தின் எதிரிகளையும் துரோகிகளையும் கிலி கொள்ளச் செய்து கொண்டிருக்கின்றது.
தமிழினத்தின் இருப்புக்காக அவர் முன்னெடுத்த நீண்ட காலப் போராட்டமானது 2009இல் மௌனிக்கப்பட்டது. மௌனிக்கப்படுவதற்கும் முடித்துக் கொள்ளப்படுதல் அல்லது அழிக்கப்படுதலுக்கும் உலகின் அத்தனை மொழிகளிலும் நிறையவே வேறுபாடுகள் காணப்படுகின்றன.
தமிழர்களின் தொன்மைக்காலம் முதலான அறிவியல் விஞ்ஞான மற்றும் போர்க்கலைகள் தொடர்பான வளர்ச்சியினால் அச்சமடைந்திருந்த மேற்கத்தைய நாடுகளின் இன அழிப்பு மோகத்துக்குச் சிங்கள தேசத்தின் மனோநிலை சாதகமாகப் பொருந்தியதுடன், காலத்துக்கு காலம் தழிழினத்தின் சாபக்கேடுகளாகத் தோன்றிய எட்டப்பன் காக்கை வன்னியன் போன்றோரை அடியொற்றியவர்களாக மாத்தையா, கருணா, கே.பி.போன்றோரும் தோன்றி இனமொன்றின் பேரவலத்துக்குத் துணைபோயினர்.
முள்ளிவாய்க்காலில் தமிழினம் தனது குரலை மௌனித்துக் கொள்வதாக
அறிவித்ததை ஜீரணிக்க முடியாத சக்திகள் தலைவர் இறந்து விட்டதாக பொய்யான செய்தி ஒன்றை வெளியிட்டு தமிழினத்தின் மனோபலத்தைச் சிதைக்கும் நாசகார வேலையினை தந்திரோபாயமாக முன்னெடுத்தனர். எனினும் அது நீண்ட காலத்துக்கு நிலைக்கவில்லை.
தலைவர்
க.பண்பரசன்
0768923576
0702923576
(WhatsApp)
செயலாளர்
சுஜானி.செ
0766954172
பொருளாளர்
ந.கரன்
0772883804
