யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் வியாழக்கிழமை (31.07.2025) முன்னெடுக்கப்பட்ட போது புதிதாக மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
வியாழக்கிழமை (31) மூன்று எலும்புக்கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று மனித எலும்புக்கூடடு தொகுதிகள் இன்றையதினம் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டது.
அந்தவகையில் இதுவரை 118 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை மொத்தமாக 105 எலும்பு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்பு தொகுதிகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமை முடிவடையும் ஸ்கேன் பரிசோதனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.