
01 ஆகஸ்ட் 2025 | வெள்ளி | இன்று – அஷ்டமி | |
தேதி | 16 – ஆடி – விசுவாவசு | வெள்ளி. |
நல்ல நேரம் | 12:15 – 01:15 கா / AM 04:45 – 05:45 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 01:45 – 02:45 கா / AM 06:30 – 07:30 மா / PM |
இராகு காலம் | 10.30 – 12.00 |
எமகண்டம் | 03.00 – 04.30 |
குளிகை | 07.30 – 09.00 |
சூலம் | மேற்கு |
பரிகாரம் | வெல்லம் |
சந்திராஷ்டமம் | ரேவதி |
நாள் | சம நோக்கு நாள் |
லக்னம் | கடக லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 50 |
சூரிய உதயம் | 06:03 கா / AM |
ஸ்ரார்த திதி | அஷ்டமி |
திதி | இன்று அதிகாலை 05:49 AM வரை சப்தமி பின்பு அஷ்டமி |
நட்சத்திரம் | இன்று அதிகாலை 02:16 AM வரை சித்திரை பின்பு சுவாதி |
சுபகாரியம் | ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் |
இன்றைய ராசி பலன் | 01 ஆகஸ்ட் 2025 | வெள்ளி.
மேஷ ராசி நேயர்களே எதிர்பார்த்த காரியங்கள் தாமதமானாலும், எதிர்பாராத சில வேலைகள் முடிவடையும். பெற்றோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கடன் தொந்தரவு இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும். | ரிஷப ராசி நேயர்களே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். எதிரிகளின் தொல்லை இருக்கும். காணாமல் போன முக்கிய பொருள் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். |
மிதுன ராசி நேயர்களே குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். தூர பயணத்தால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். | கடக ராசி நேயர்களே குடும்பத்தில் மேன்மை நிலை உண்டாகும். பிராத்தனைகள் நிறைவேறும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். |
சிம்ம ராசி நேயர்களே குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வரும். | கன்னி ராசி நேயர்களே குடும்ப பொறுப்புகளை கவனிக்க வேண்டிவரும். மன சோர்வு நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும். |
துலாம் ராசி நேயர்களே உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து போகும். புது தொழில் யோகம் அமையும். | விருச்சிக ராசி நேயர்களே குடும்ப அந்தஸ்து வெகுவாக உயரும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். |
தனுசு ராசி நேயர்களே நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிடிவாதப் போக்கை கைவிடவும். நண்பர்களிடம் கேட்டது கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும். | மகர ராசி நேயர்களே மனதில் உருவான இனம்புரியாத பயம் நீங்கும். பிரியமானவர்கள் வழியில் மனசங்கடங்கள் வரும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. |
கும்ப ராசி நேயர்களே குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாக அமையும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். | மீன ராசி நேயர்களே உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். மனதில் இருந்த வீண் கவலை அகலும். உணவு கட்டுப்பாடு அவசியம் தேவைப்படும். உத்யோகத்தில் கவனம் தேவை. |
வார ராசி பலன் (28-07-2025 To 03-08-2025)
மேஷ ராசி அன்பர்களே. இந்த வார ராசிபலன்படி, குடும்பத்திற்காக நிறைய பாடுபட வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த பல நல்ல விஷயங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்களும் நடக்கும். குடும்பத்தில் முக்கிய காரியங்கள் கைகூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடக்கும். பொருளாதார நிலை நன்றாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். மனம் வருந்துபடியான விஷயம் ஏதேனும் இருந்தால் மறந்துவிடுவது நல்லது. எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும். பரிகாரம் : வராகியை வழிபடவும் | ரிஷப ராசி அன்பர்களே. இந்த வார ராசிபலன்படி, உங்களுடைய செல்வாக்கு, திறமை, புகழ், கீர்த்தி, செயல்பாடு எல்லாம் நன்றாக அமையும். முக்கிய நேரங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. பிரியமானவர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு சீராகும். குடும்ப பாரம் காரணமாக அமைதி குறையலாம். பெரியோர்களின் தலையீட்டால் குடும்ப பிரச்சனைக்கு தீர்வு வரும். உணவு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துகொள்ளவும். அடுத்தவர் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். தூர பயணத்தின் போது உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். உத்யோகத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய சவால்கள் இருக்கும். பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும் |
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சீராகும். முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் மிகவும் சிரமம் ஏற்படும். யாருடைய உதவியும் இல்லாமல் தனியாளாக நின்று காரியங்களை செய்து முடிக்க முடியும். வீண் செலவுகளால் பணம் விரையம் அதிகமாகும். நடைமுறையில் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குடுமபத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்ப்புக்கு தகுந்தார் போல் ஒருவர் அறிமுகமாவர். உடல் உபாதைகள் நீங்கும். இரவு நேர வாகன பயணங்களில் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகளும், லாபமும் கிடைக்கும். பரிகாரம் : பெருமாளை வணங்கி வழிபடவும் | கடக ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்ல பலனை தரும். குடும்ப தேவைகள் எல்லாம் பூர்த்தியடையும். எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். மனதில் இனம் புரியாத கவலைகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் வரும். குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளவும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம் கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் எல்லோரிடமும் அனுசரித்து செல்வது எல்லா வகையிலும் நன்மையை தரும். புதிய முயற்சிகள் எதையும் இப்போதைக்கு மேற்கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணம் ஏற்படும். பரிகாரம் : அம்பாளை வணங்கி வழிபடவும் |
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் வீண் செலவுகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி நிம்மதி பெற முடியும். நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகளை சற்று தள்ளி போடவும். குடும்ப விஷயத்துக்காக நிறைய அலைச்சல் இருக்கும், உடல் சோர்வு ஏற்படும், கவலை வேண்டாம். கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். திட்டமிட்ட காரியம் ஒன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும் | கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வேண்டியவர்களிடம் முக்கிய விஷயங்களில் அனுசரித்து செல்வது நன்மை தரும். அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது மூலம், வரும் பிரச்னைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிப்பது அவசியம். மன நிம்மதிக்காக ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு கொள்ளவும். குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். உடல் ஆரோக்கியம் மேன்மை தரும். தடைபட்ட காரியங்கள் இனிதே நடைபெறும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். தான தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். உத்யோகத்தில் மனநிறைவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பரிகாரம் : குலதெய்வத்தை முறையாக சென்று வழிபடவும். |
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்ப வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். மனம் யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபாடு கொள்ளும். வருமானத்தில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த சந்தோஷம் இருக்கும். புது வீடு, மனை வாங்குவது தொடர்பான யோசனை வரும். வண்டி வாகன யோகம் உண்டு. முக்கிய விசேஷங்களில் கலந்துகொள்ள முடியும். வங்கி கடன் முயற்சிகள் வெற்றி அடையும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த பல நல்ல வாய்ப்புகள் வரும். முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் மிகவும் சிரமம் ஏற்படும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழிலில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். பரிகாரம் : துர்கையை வழிபடவும் | விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, கடந்த சில தினங்களாக இருந்த அலைச்சல் மற்றும் டென்ஷன் காரணமாக உடலுக்கும் மனதுக்கும் சிறிது ஓய்வு தேவைப்படும். உங்கள் அன்றாட வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு சற்று ஒய்வு எடுத்துக்கொள்ளவும். உடல் நலனில் போதுமான அளவு அக்கறை காட்டவும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். புது நண்பர்கள் அறிமுகவர். கடன் தொல்லைகள் மனதை வாட்டும், முடிந்த வரை கடனை அடைத்துவிடுவது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், இருப்பினும் வேலைபளு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டியும் பொறாமையும் இருக்கும். பரிகாரம் : முருக பெருமானை வழிபடவும் |
தனுசு ராசி அன்பர்களே, இந்த ராசிபலன்படி, எதிலும் சற்று அதிக முயற்சி எடுத்தால் வெற்றி சேரும். திட்டமிட்ட காரியம் கச்சிதமாக முடியும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். எதிலும் சாதகமான சூழல் உண்டு. பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும். பல நாட்களாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். நண்பர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். பொருளாதாரம் பற்றிய கவலைகள் அதிகமாக இருக்கும். வரவு செலவு கணக்குகளை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடும். பல நாட்களாக எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்க தாமதம் ஆகலாம். உத்யோகத்த்தில் இருந்து நெருடல்கள் குறையும். தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களை தீட்ட முடியும். . பரிகாரம் : நவக்கிரகத்தை தினமும் 9 முறை வலம் வரவும் | மகர ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் பொருளாதார நிலை சீராக இருக்கும். உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் நல்ல முறையில் செயல்படும். பெரியோர்களின் ஆசியும் மகான்களின் தரிசனமும் கிடைக்கும். உடல் உபாதைகள் வராமல் இருக்க, உடல் நலத்தில் அதிகம் கவனம் செலுத்தவும். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் நன்மை தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் சீராகும். வாகன பயணங்களில் மிகுந்த கவனம் தேவை. உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவர். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும். தொழில், வியாபாரம் சிறப்படையும். பரிகாரம் : குருபகவானை வழிபடவும் |
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, உங்கள் எண்ணம் போல் எல்லாம் காரியங்களும் நல்லபடியே நடக்கும். மனமகிழ்ச்சி பல மடங்கு கூடும். தெய்வ பலத்தால் எல்லாம் எண்ணியபடி ஈடேறும். சற்றும் எதிர்பாராத சில மறைமுக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. புது நபர்களிடம் பழகும் போது ஜாக்கிரதையாக பழகவும். குடும்ப வருமானம் போதுமான அளவு இருக்கும். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆடம்பர செலவுகளை பாதியாக குறைத்துக் கொண்டால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படாது. குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிவரும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். பரிகாரம் : விநாயக பெருமானை வணங்கி வழிபடவும் | மீன ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மன நிறைவு உண்டாகும். அடுத்தவர்களின் ஆலோசனைகளை அளவோடு எடுத்துக்கொள்ளவும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். எல்லா விஷயங்களும் ஏற்றம் இறக்கமாகவே உள்ளது. வருமானம் பொறுத்தவரை பெரியளவில் இல்லாமல் சற்று குறைவாக தான் இருக்கும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். குடும்ப விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். உத்யோகத்தில் பல சாதனை புரிய முடியும். தொழில், வியாபாரத்தில் ஏற்றமான நிலை இருக்கும். பரிகாரம் : சாய்பாபாவை வழிபடவும் |
06 ஜூலை 2025 – ஞாயிறு | முஹர்ரம் பண்டிகை
ஜூலை 2025 சுபமுகூர்த்த நாட்கள்
Date | Month | Year | Day | Pirai |
02 18 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Valarpirai வளர்பிறை |
07 23 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Valarpirai வளர்பிறை |
13 29 | July ஆனி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Theipirai தேய்பிறை |
14 30 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
16 32 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Theipirai தேய்பிறை |
ஜூலை 2025 தமிழ் திருமண தேதிகள்
Date | Month | Year | Day | Pirai |
02 18 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Valarpirai வளர்பிறை |
07 23 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Valarpirai வளர்பிறை |
13 29 | July ஆனி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Theipirai தேய்பிறை |
14 30 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
16 32 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Theipirai தேய்பிறை |
பண்டிகைகள் ஜூலை 2025 |
Jul 02 – Wed – ஆனி உத்திர தரிசனம் |
Jul 28 – Mon – ஆடிப்பூரம் |
- ஜூலை 2025 விசேஷங்கள் :
ஜூலை 01 (செ) சிதம்பரம் சிவன் தேர்
ஜூலை 02 (பு) ஆனி உத்திரம்
ஜூலை 04 (வெ) விவேகானந்தர் நினைவு நாள்
ஜூலை 05 (ச) ராமநாதபுரத்தில் தேர்
ஜூலை 06 (ஞா) மொகரம்
ஜூலை 07 (தி) கண்டமாதேவி, திருக்கோளக்குடி, கானாடுகாத்தான் சிவன் தேர்
ஜூலை 08 (செ) நெல்லையப்பர் தேர்
ஜூலை 10 (வி) சாத்தூர் பெருமாள் தேர்
ஜூலை 12 (ச) திருத்தங்கல் தேர்
ஜூலை 16 (பு) தட்சிணாயண புண்ணிய காலம்
ஜூலை 20 (ஞா) ஆடி கிருத்திகை
ஜூலை 24 (வி) ஆடி அமாவாசை
ஜூலை 27 (ஞா) ராமேஸ்வரம், திருவாடானை, நயினார்கோவில் அம்மன் தேர்
ஜூலை 28 (தி) நாக சதுர்த்தி
ஜூலை 28 (தி) ஆடிப்பூரம்
ஜூலை 28 (தி) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர்
ஜூலை 29 (செ) கருட பஞ்சமி