

ஈழத்து நிலவன்

தலைவனுக்கான உண்மையான வீரவணக்கம் என்றால் என்ன என்பதை அறிவீர்களா?
அது தலைவனின் கொள்கைகளை முழுமையாக உயிராக ஏற்று, அவர் காட்டிய உயர்ந்த இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதே ஆகும். வீரவணக்கம் என்பது வெறும் ஒரு நிகழ்ச்சி அல்லது விழா அல்ல. அது ஒரு வாழ்வியல், ஒரு தியாகத்தின் சுமை, ஒரு விடுதலைப் பயணத்தின் பொறுப்பு.
“வீரவணக்கம்” என்ற பெயரில் பலர் நிகழ்வுகளை நடத்துகிறார்கள். ஆனால் அந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் இன்றும் தலைவரின் காட்டிய வழியில் எங்கே? தமிழீழ விடுதலையின் போராட்டத்தில் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்?
மக்கள் மனங்களில் தலைவர் என்றும் உயிருடன் வாழ்கிறார். ஆனால் அவரது வழியை பின்பற்றாமல் அவருக்கு வீரவணக்கம் செய்யும் நிகழ்வுகள் அரசியல் வஞ்சகமாக மட்டுமே மாறி விடுகின்றன.
மக்கள் விழித்திருப்பர்.
நமது தேசியத் தலைவரை உண்மையாக மரியாதை செய்ய விரும்பினால், அவர் போல வாழுங்கள். அவர் தொடங்கிய விடுதலைப் பயணத்தை தொடருங்கள். அதுவே உண்மையான வீரவணக்கம்.