
கப்டன் திலகா
இராசதுரை ரதீஸ்வரி
6ம் வட்டாரம், சேனையூர், மூதூர், திருகோணமலை
வீரப்பிறப்பு: 18.05.1970
வீரச்சாவு: 03.08.1991
புல்லாவெளிப் பகுதியிலிருந்து ஆனையிறவு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
குள்ளமான சிறிய உருவம். சிரிக்கும் முகம், அமைதியான சுபாவம், எல்லாருடைய மனங்களையும் கவர்ந்த, பழகுவதற்கு இனிய போராளி. கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மனதில் ஒரு உருவம் தெரிகிறதல்லவா? நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். அதோ, அந்த உருவம் ஓடுவதைப் பாருங்கள். பாதங்கள் தரையில் படாதது போல் தோன்றுகிறதல்லவா. உடற்பயிற்சி செய்வதைப் பாருங் கள். எப்படி இவ்வளவு வேகமாகவும், லாவக மாகவும் உடலை வளைக்க முடிகிறது என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவள் தான் திலகா. சிட்டுக்குருவி போல் துரு துருவென்ற இயல்புடன் எப்போதுமே உற்சாகமாகத்தான் ஓடித்திரிவாள். திலகாவிடம் பயிற்சிபெற்ற பெண் புலிகள் ”திலகாக்கா மாத்திரம் எப்படி சோர்வேயில்லாமல் இப்படிச்சுறு சுறுப்பாக இருக்கிறார்?” என்று ஆச்சரியப்படுவார்கள்.
”பயிற்சிப் பாசறையில் நாம் பயிற்சி எடுக்கிறோமா அல்லது திலகாக்கா பயிற்சி எடுக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கும்.
ஏனென்றால் அவர் எந்நேர மும் ஓடித் திரிந்து கொண்டே இருப்பார்” என்று அவர்கள் சொல்வார்கள்.
-களத்திற்கூட அவளது உற்சாகம் சிறிதும் குறையவில்லை .
1989 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அமைப்போடு தன்னை இணைத் துக் கொண்ட திலகா, இதுவரை காலமும் பயிற்சி கொடுத்து படையணிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால்,
களம்செல்லும் சந்தர்ப்பம் அவளுக்குக் கிட்டவில்லை.
ஆனையிறவு மோதலே அவளது அவாவை நிறைவேற்றியது. வழமைபோல் படு உற்சாகமாகவே தன்குழுவை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு மோதலின் கடைசிக் கட்டம். திலகா தனது அணியுடன் களம் புகுந்தாள். அகிலன் வெட்டையில் நின்ற இராணுவம் ஆனையிறவை நோக்கி முன்னேறத் தொடங்கியது. புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையில் கடும் மோதல் வெடித்தது. இராணுவம் அங்குலம் அங்குலமாக முன்னேற முயன்றது. இராணுவத்தினரின் நகர்வுகளுக்கு ஏற்ற வகையில், திலகா தனது அணியின் வியூகங்களை மாற்றி மாற்றியமைத்துப் போரிட்டுக் கொண்டிருந்தாள். இராணுவத் தரப்பில் பலரை நாம் வீழ்த்திய போதும் எம் பக்கமும் இழப்புகள் அதிகமாகவே இருந்தன ,களத்தில் நிற்கும் எம்மவர் தொகையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டது .ஆனாலும் இராணுவத்தின் நகர்வு தடுக்கப்பட்ட வேண்டும் .திலகா உடனேயே தொலைத் தொடர்பு சாதனம்மூலம் தனது குழுவின் அணித் தலைவர்கள் அழைத்தாள்
முன்னுக்குப் போங்கோ. சளைக்காமல் அடிபடுங்கோ. ( {c}இணையத்தில் தட்டச்சு வேர்கள் இணையம் ) வீரமரணமடைந்த ஒவ்வொரு போராளியையும் மனதில் நினைச்சுக்கொண்டு போங்கோ – போய் அடிபடுங்கோ” என்று, திரும்பத் திரும்பச் சொல்லி தன் குழுவை உற்சாகப்படுத்திக் கொண்டு சண்டைக் குத்தலைமை தாங்கினாள்;
சண்டையும் தீவிரமடைந்தது,இராணுவத்தினரின்துப்பாக்கி ஒன்றிலிருந்து புறப்பட்ட ரவை, திலகாவைத் துளைத்துச் சென்றது. தரையில் படாமல் பறப்பது போல் ஓடுகின்ற திருமலை மண் பெற்ற அந்தத்தவப் புதல்வி, அந்தப் பெரும் மணல்வெளியிலே சாய்ந்தாள்.
அரை மயக்கத்திலிருந்த போதும் அவள் வாய், செத்த ஒவ்வொரு போராளியையும் நினையுங்கோ போய் அடிபடுங்கோ” என்றே கட்டளையிட்டுக்கொண்டிருந்தது.
வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படும் வழியிலும் ஏதோ சொல்ல விரும்புவது போல் அவளது வாய், திறந்து திறந்து மூடியது. ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை.
வைத்தியசாலைக்கு அவள் கொண்டுவரப்பட்ட பின்னர் உயிர்பிரியும் இறுதி நேரத்தில் கூட, அவள் வாய் எதையோ முணுமுணுத்தது. நான் நினைக்கிறேன் கடைசி நேரத்தில் கூட, “செத்த ஒவ்வொரு போராளியையும் நினைச் சுக் கொண்டு அடிபடுங்கோ” என்று சொல்லத்தான், அவள் விரும்பியிருப்பாள்,
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”