செம்மணி – சித்தப்பாத்தி மனிதப் புதைகுழியில் சனிக்கிழமை (02.08.2025) இரண்டாவது கட்டத்தில் 28 வது நாளாகவும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது புதிதாக நான்கு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி – சித்தப்பாத்தி மனிதப் புதை குழியில் இதுவரை 126 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நான்கு மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இதுவரை 117 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.






