ஆந்திராவின் பபட்லா மாவட்டத்தில் பலிகுரவா பகுதியில் சத்யகிருஷ்ணா என்ற பெயரில் கிரானைட் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை அங்கு 16 பேர் வேலை பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் அனைவரும் சிக்கிக் கொண்டனர். 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், 10 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் சந்திரபாபு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.