இலங்கையின் பொலன்னறுவை வெலிகந்த-நாகஸ்தென்ன பகுதியில் செவ்வாய்க்கிழமை (05.08.2025) மாலை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது கால்வாயில் விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்தான்.

வீட்டிலிருந்து “ஆடுகளைப் பார்க்கப் போகிறேன்” என தாயிடம் கூறிவிட்டு சென்ற சிறுவன், வெலிகந்த பகுதியில் உள்ள கால்வாயில் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.