சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு, மொரட்டுவை, கட்டுபெத்த சந்தியில் பயணித்த லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பிலியந்தலை, கல்கிஸ்ஸை மற்றும் பொல்கஸ்ஸோவிட்ட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29, 46 மற்றும் 66 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து 10,000 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.