செம்மணி மனித புதைகுழியில் 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 133 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது என சட்டத்தரணி வி.எஸ். நிரைஞ்சன் தெரிவித்தார்.

செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 32 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் புதன்கிழமை (6) முன்னெடுக்கப்பட்டது.
அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், புதிதாக ஆறு மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளது.
மூன்று மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 133 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை செருப்பு , தாயம் , காசு, உள்ளிட்ட சான்று பொருட்கள் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இன்றுடன் தற்காலிகமாக அகழ்வு பணிகள் நிறுத்தப்படுவதால் அடையாளம் காணப்பட்ட மேலும் எழு எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.