
07 ஆகஸ்ட் 2025 | வியாழன். | |
தேதி | 22 – ஆடி – விசுவாவசு | வியாழன். |
நல்ல நேரம் | 10:45 – 11:45 கா / AM 00:00 – 00:00 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 12:15 – 01:15 கா / AM 06:30 – 07:30 மா / PM |
இராகு காலம் | 01.30 – 03.00 |
எமகண்டம் | 06.00 – 07.30 |
குளிகை | 09.00 – 10.30 |
சூலம் | தெற்கு |
பரிகாரம் | தைலம் |
சந்திராஷ்டமம் | மிருகசீரிடம் திருவாதிரை |
நாள் | கீழ் நோக்கு நாள் |
லக்னம் | கடக லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 46 |
சூரிய உதயம் | 06:04 கா / AM |
ஸ்ரார்த திதி | திரயோதசி |
திதி | இன்று பகல் 02:45 PM வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி |
நட்சத்திரம் | இன்று பகல் 03:00 PM வரை பூராடம் பின்பு உத்திராடம் |
சுபகாரியம் | மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள். |
இன்றைய ராசி பலன் | 07 ஆகஸ்ட் 2025 | வியாழன்.
மேஷ ராசி நேயர்களே புது நபர்களை அதிகம் நம்ப வேண்டாம். மனதிற்கு இதமான தகவல்கள் வரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். | ரிஷப ராசி நேயர்களே குடும்ப நலனில் கவனம் தேவை. திடீர் மருத்துவ செலவுகள் வரும். தேவையில்லாத செயல்களில் ஈடுபட வேண்டாம். உத்யோகத்தில் அமைதி நிலவும். |
மிதுன ராசி நேயர்களே குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். எதிலும் நன்கு யோசித்து செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். | கடக ராசி நேயர்களே அந்நிய நபர்களின் நட்பு கிடைக்கும். எதையும் ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக செய்யவும். ஆரோக்கிய விஷயத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும். |
சிம்ம ராசி நேயர்களே மனதில் புதிய தெம்பும், உற்சாகமும் பிறக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் கூடும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் ;வழக்கம் போல் செல்லும். | கன்னி ராசி நேயர்களே பல வேலைகளை ஒரே நேரத்தில் பார்க்க வேண்டி வரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும். |
துலாம் ராசி நேயர்களே உறவினர்கள் உங்கள் இல்லம் நாடி வருவர். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். | விருச்சிக ராசி நேயர்களே பொருளாதார நெருக்கடிகள் வெகுவாக குறையும். மன பயம் நீங்கும். விஐபிகளின் தொடர்பு ஆதாயத்தை தரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். |
தனுசு ராசி நேயர்களே குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். மன சஞ்சலம் ஏற்பட்டு பின் நீங்கும். நம்பியவருக்கு நல்லுதவி செய்ய முடியும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். | மகர ராசி நேயர்களே குடும்ப அந்தஸ்து உயர ஆரம்பிக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். சாட்சி எழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும். |
கும்ப ராசி நேயர்களே குடும்பத்தினர் பாச மழை பொழிவர். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றுமாக இருக்கும். தொல்லை தந்தவர்கள் விலகி நிற்பர். உத்யோகத்தில் வேலை பளு கூடும். | மீன ராசி நேயர்களே குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும். தொலைதூர பயணங்களில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். |
வார ராசி பலன் (04-08-2025 To 10-08-2025)
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெற நிறைய வாய்ப்புள்ளது. சில நேரங்களில் எதிர்பார்க்காத விஷயங்களும் நடக்கும். பொருளாதார நிலை நன்றாக உள்ளது. குடும்பத்தில் முக்கிய வேலைகள் முடிவடையும். வீட்டில் சுப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. கணவன் மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மனம் வருந்துபடியான விஷயம் ஏதேனும் இருந்தால் மறந்துவிடுவது நல்லது. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றியடையும். பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும் | ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் சாதகமான சூழ்நிலைகல் நிலவும். எதிர்பாராத வகையில் சில வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரியமானவர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். வீடு, வாகனம் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு அது உடனே சீராகும். அடுத்தவர் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே திடீர் மனஸ்தாபம் வரலாம். தூர பயணத்தின் போது உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில், வியாபாரத்தில் சவால்களை சந்திக்க வேண்டிவரும். பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும் |
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து மதிப்பு தானாக உயரும். குடும்பத்தில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சீராகும். தேவையற்ற செலவுகளால் பணம் விரையம் அதிகமாகும். நடைமுறையில் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. பிரியமானவர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். குடுமபத்தில் இக்கட்டான சூழ்நிலை நிலவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். உடல் உபாதைகள் விரைவில் குணமாகும். இரவு நேர வாகன பயணங்களில் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலல், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பரிகாரம் : பெருமாளை வணங்கி வழிபடவும் | கடக ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, எதிர்காலம் பற்றிய கனவு நிறைய இருக்கும். குடும்ப வருமானம் உயர ஆரம்பிக்கும். இது வரை பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைக்க போகிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக குடும்ப பிரச்சனைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வு கிடைக்கும். உடல் உபாதைகள் நீங்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் உடனே கைகூடும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். புதிய முயற்சிகள் எதையும் இப்போதைக்கு மேற்கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புது தொழில் தொடங்கும் யோகம் அமையும். பரிகாரம் : அம்பாளை வணங்கி வழிபடவும் |
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் வரவு செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்களுடைய எண்ணங்களும், திட்டங்களும் நல்லமுறையில் செயல்படும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். உறவினர்களிடையே இருந்து வந்த மன கசப்பு நீங்கும். திருமணம் தொடர்பான முயற்சிகளை சற்று தள்ளி போடவும். குடும்ப விஷயத்துக்காக நிறைய அலைச்சல் இருக்கும், உடல் சோர்வு ஏற்படும், கவலை வேண்டாம். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மதிப்பு தானாக உயரும்.. திட்டமிட்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிக்க முடியும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும் | கன்னி ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, மனதில் பட்டதை தெரியமாக பேசுவது நல்லது. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புது முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். தெய்வ பிராத்தனைகள் நிறை வேறும். குடும்பத்துடன் பயணம் செல்ல வேண்டிவரும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். நெருங்கிய உறவினர்களுடன் சுமுக உறவு காணப்படும். புதிய வீடு, நிலம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சொல்லும்படியான காரியங்கள் பல நடக்கும்உத்யோகத்தில் உயர்ந்த நிலையை எட்ட முடியும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும் |
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் மிகுந்த சிரமம் இருக்கும். மனதில் சந்தோஷம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த காரியத் தடை விலகும். கைமாற்றாக வெளியே கொடுத்த பணம் திரும்பி வரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். உற்றார், உறவினர் வருகையால் வீடு களைகட்டும். வங்கி கடன் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கி சகஜ நிலை திரும்பும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழிலில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும் | விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்ப வருமானத்தில் திருப்திகரமான சூழ்நிலை கடந்த சில தினங்களாக இருந்த அலைச்சல் மற்றும் டென்ஷன் காரணமாக உடலுக்கும் மனதுக்கும் சிறிது ஓய்வு தேவைப்படும். ஆகையால் மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு சற்று ஒய்வு எடுத்துக்கொள்ளவும். உடல் நலனில் போதுமான அளவு அக்கறை காட்டவும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். புது நண்பர்கள் அறிமுகவர். கடன் தொல்லைகள் மனதை வாட்டும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும். பரிகாரம் : முருக பெருமானை வழிபடவும் |
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்ப விஷயத்திலும் மற்ற எல்லா விஷயத்திலும் கவனம் செலுத்துவது அவசியம். மனதில் சந்தோஷமும், தெம்பும் அதிகரிக்கும். வருமானம் பொறுத்தவரை பெரியளவில் இல்லாமல் சற்று குறைவாக தான் இருக்கும், அதற்காக கவலைப்பட்டு மற்ற விஷயங்களில் கோட்டை விட வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். நண்பர்கள் சில நேரங்களில் விரோதமாக செயல்படலாம். பெற்றோர்களின் அறிவுரை உதவியாக இருக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். பரிகாரம் : சாய்பாபாவை வழிபடவும் | மகர ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்ல பலனை தரும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி வரும். சற்றும் எதிர்பாராத சில மறைமுக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. புது நபர்களிடம் பழகும் போது ஜாக்கிரதையாக பழகவும். குடும்ப வருமானம் போதுமான அளவு இருக்கும். ஆடம்பர செலவுகளை பாதியாக குறைத்துக் கொண்டால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படாது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். எந்த காரியத்தையும் சிறிது முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். பரிகாரம் : விநாயக பெருமானை வணங்கி வழிபடவும் |
கும்ப ராசி அன்பர்களே, இந்த ராசிபலன்படி, வாக்கு வன்மையால் எதையும் செய்து முடிக்க வேண்டும். நீங்கள் விரும்பியது போல் எல்லாம் நல்ல முறையில் நடக்கும். ஓயாத அலைச்சல் காரணமாக உடல், சோர்வும் அசதியும் ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கனவு நிறைவேறும். பெற்றோர்கள் வழியில் சகாயமும், ஆதரவும் அதிகமாகும். உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதாரம் பற்றிய கவலைகள் அதிகமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்து வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பரிகாரம் : நவக்கிரகத்தை தினமும் 9 முறை வலம் வரவும் | மீன ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, நீங்கள் விரும்பியது போலவே எல்லாம் நடக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். மனக்கவலைகள் அனைத்தும் மறையும். தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சீராகும். புதிய வீடு, மனை வாங்க வேண்டும் என்ற எண்ணம்,இருக்கும். உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் சீராகும். வாகன பயணங்களில் கவனம் தேவை. எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். உத்யோகத்தில் உங்கள் புகழ், கௌரவம் உயரும். தொழில், வியாபாரம் சிறப்படையும். பரிகாரம் : குருபகவானை வழிபடவும் |
தமிழ் நாட்காட்டி ஆகஸ்ட் 2025 | |
அமாவாசை | 22-ஆகஸ்ட்-2025 வெள்ளிக்கிழமை |
பௌர்ணமி | 08-ஆகஸ்ட்-2025 வெள்ளிக்கிழமை |
கார்த்திகை | 16-ஆகஸ்ட்-2025 சனிக்கிழமை |
சஷ்டி விரதம் | 29-ஆகஸ்ட்-2025 வெள்ளிக்கிழமை |
சங்கடஹர சதுர்த்தி | 12-ஆகஸ்ட்-2025 செவ்வாய்கிழமை |
சதுர்த்தி | 27-ஆக-2025 புதன் |
பிரதோஷம் | 06-ஆகஸ்ட்-2025 புதன்கிழமை 20-ஆகஸ்ட்-2025 புதன்கிழமை |
திருவோணம் | 08-ஆக-2025 வெள்ளிக்கிழமை |
மாதா சிவராத்திரி | 21-ஆகஸ்ட்-2025 வியாழன் |
ஏகாதசி | 05-ஆகஸ்ட்-2025 செவ்வாய்கிழமை 19-ஆகஸ்ட்-2025 செவ்வாய் |
அஷ்டமி | 01-ஆகஸ்ட்-2025 வெள்ளிக்கிழமை 16-ஆகஸ்ட்-2025 சனிக்கிழமை 31-ஆகஸ்ட்-2025 ஞாயிறு |
நவமி | 02-ஆகஸ்ட்-2025 சனிக்கிழமை 17-ஆகஸ்ட்-2025 ஞாயிறு |
விடுமுறைகள் | 15-ஆகஸ்ட்-2025 வெள்ளிக்கிழமை அரசு விடுமுறைகள் 16-ஆகஸ்ட்-2025 சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி 27-ஆகஸ்ட்-2025 புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி |
திருமண நாட்கள் | 20-Aug-2025 புதன்கிழமை தேய்பிறை 21-Aug-2025 வியாழன் தேய்பிறை 27-Aug-2025 புதன்கிழமை வளர்பிறை 28-Aug-2025 வியாழன் வளர்பிறை 29-Aug-2025 வெள்ளிக்கிழமை வளர்பிறை |
திருவிழாக்கள் | 03-Aug-2025 ஞாயிறு ஆடிப்பெருக்கு விழா 08-Aug-2025 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் 09-Aug-2025 ஆவணி அவிட்டம் 12-Aug-2025 செவ்வாய் மஹாசங்கடஹர சதுர்த்தி 16-Aug-2025 சனிக்கிழமை கோகுலாஷ்டமி 27-Aug-2025 புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி |