
விமான சேவை ‘டாடா’ குழுமத்துக்கு சொந்தமான, ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம், உலகம் முழுதும் விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில், 3,600 பைலட்டுகள் உட்பட 24,000 ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
ஏர் இந்தியாவில் பணிபுரியும் விமானிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஓய்வு வயது 58 ஆக உள்ளது. இது தற்போது அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, விமானிகள் 65 வயது வரையிலும், விமானத்தில் பறக்காத பிற ஊழியர்கள் 60 வயது வரையிலும் பணியில் இருக்கும் வகையில் வயது வரம் பு உயர்த்தப்பட்டுள்ளது.
முடிவு இந்த அறிவிப்பை ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான கேம்ப்பெல் வில்சன் நேற்று வெளியிட்டார். ‘ஏர் இந்தியா’ மற்றும் ‘விஸ்தாரா’ நிறுவனங்களின் இணைப்புக்குப் பின், சீரான ஓய்வூதியக் கொள்கைகளை நோக்கிய ஒரு படியாக இந்த முடிவு கருதப்படுகிறது.
அதேசமயம், விமான நிறுவனத்தில் பணிபுரியும் பிற ஊழியர்களின் ஓய்வு வயது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.