
என் பால் முலைகள்
ஆறாத் தீயெனக் கொதிக்கின்றன.
கனவுகளில் என் கை விரல்கள்,
புதை மண்ணை கீறுகின்றன.
சின்னஞ்சிறு எலும்புகளைத்
தோண்டுகின்றன.
பரம்பரைகளாய்
சிங்களத்தின் படுகொலை
முகத்தை காண்கின்றோம்.
இரண்டு மாதச் சவத்தை
குழியில் தோண்டி எடுக்கும் நாம்
இனியும் எப்படி வாழ்வது?
என் குழந்தையின் படு கொலைக்கு பழி:
என் மற்றக் குழந்தைகளை
தீவிரவாதிகளாகவே வளர்க்கின்றேன்.
எனது தோழர்களே –
உங்கள் குழந்தைகளையும்.
என் கைகளில் ஒப்படையுங்கள்!
– அம்சவல்லி
My milk-swollen breasts
seethe.
In dreams, my fingers
scratch through burial soil,
digging up tiny bones.
Generation after generation,
We have witnessed
the Genocidal face of Sinhala.
We who dig up
a two-month-old corpse
from mass graves –
How can we keep living?
For my child’s slaughter:
I will raise my other children
as terrorists.
My comrades –
Surrender your infants
into my hands!
– Amsavalli