செம்மணி மனித புதைகுழியின் கதையை கேட்டறிந்த பின்னர் சிங்களத்தில் அது குறித்து எழுத தீர்மானித்ததாக தெரிவித்துள்ள ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலை, செம்மணி மனித புதைகுழி குறித்த முதற்கட்ட விசாரணைகள், இலங்கையில் காணாமல்போதல், செம்மணி படுகொலையின் தற்போதைய கதைகோப்ரல் சோமரட்ண ராஜபக்சவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஆகிய விடயங்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
எதிர்வரும் வியாழக்கிழமை செம்மணி என்ற நூல் வெளியிடப்படும்யாழ்;ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் கதையை கேட்டபிறகு இந்த நூல் வெளியாகின்றது.கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலைஇசெம்மணி மனித புதைகுழி குறித்த முதற்கட்ட விசாரணைகள்இலங்கையில் காணாமல்போதல்இசெம்மணி படுகொலையின் தற்போதைய கதைகோப்ரல் சோமரட்ண ராஜபக்சவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஆகியன இந்த நூலில் அடங்கியிருக்கும்.
செம்மணிக்கு சென்ற பிறகு நாங்கள் செம்மணி மற்றும் காணாமல்போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை பெறுவதற்காக தேசிய நூலகத்திற்கு சென்றோம்.
ஆனால் செம்மணி பற்றி பெருமளவிற்கு தகவல்கள் வெளியாகவில்லை.
இதன் காரணமாக தரிந்துஉடுவரகெதர நாங்கள் நூலொன்றை வெளியிடுவோம் என தெரிவித்தார்.
நாங்கள் தொடர்ந்தும் செம்மணி குறித்து பத்திரிகைகளில்முகநூலில்எழுதி பதிவிட்டு வருகின்றோம் யூடியுப்பில் பதிவிட்டுள்ளோம்.
முதலில் செம்மணி குறித்து ஆவணப்படத்தை வெளியிடுவோமா வீடியோ வெளியிடுவோமா என சிந்தித்து பின்னர் இறுதியாக நூலை எழுத தீர்மானித்தோம்.
இதனடிப்படையில் செம்மணி குறித்து பல தரப்புகளிடமிருந்து தகவல்களை பெற்றோம்பல ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்களை ஆராய்ந்தோம்வடக்கின் காணாமலாக்கப்பட்டவர்கள் குடும்பத்தவர்களுடன் பேசினோம்குற்றம்சாட்டப்பட்ட இராணுவவீரர்களின் குடும்பத்தவர்களுடன் பேசினோம்.
இறுதியாக நாங்கள் நூலை எழுதினோம்எதிர்வரும் வியாழக்கிழமை தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இந்த நூல் வெளியாகவுள்ளது.