
13 ஆகஸ்ட் 2025 | புதன். | |
தேதி | 28 – ஆடி – விசுவாவசு | புதன். |
நல்ல நேரம் | 09:15 – 10:15 கா / AM 04:45 – 05:45 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 10:45 – 11:45 கா / AM 06:30 – 07:30 மா / PM |
இராகு காலம் | 12.00 – 01.30 |
எமகண்டம் | 07.30 – 09.00 |
குளிகை | 10.30 – 12.00 |
சூலம் | வடக்கு |
பரிகாரம் | பால் |
சந்திராஷ்டமம் | பூரம் உத்திரம் |
நாள் | மேல் நோக்கு நாள் |
லக்னம் | கடக லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 43 |
சூரிய உதயம் | 06:04 கா / AM |
ஸ்ரார்த திதி | பஞ்சமி |
திதி | இன்று காலை 08:38 AM வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி |
நட்சத்திரம் | இன்று பகல் 01:06 PM வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி |
சுபகாரியம் | கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள் |
இன்றைய ராசி பலன் | 13 ஆகஸ்ட் 2025 | புதன்.
மேஷ ராசி நேயர்களே, உங்கள் முயற்சிக்குண்டான பலன் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். | ரிஷப ராசி நேயர்களே, சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். தெய்வ காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும். |
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். பிறர் மனம் அறிந்து செயல்படவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். | கடக ராசி நேயர்களே, குடும்பத்திற்கு தேவையானது கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கவும். பெற்றோரின் அறிவுரை கிடைக்கும். தொழில், வியாபாரம் வேகமாக வளரும். |
சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தினர் விருப்பத்திற்கு செவி சாய்க்கவும். பொருளாதார நிலை உயரும். தொடர் வேலைகளால் அசதி, சோர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். | கன்னி ராசி நேயர்களே, அடுத்தவரிடம் பேசி காரியம் சாதிக்க முடியும். பொருளாதார நெருக்கடி குறைந்து நிலைமை சீரடையும். நட்பால் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். |
துலாம் ராசி நேயர்களே, எதிர்கால கனவில் ஒன்று நிறைவேறும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். திட்டமிட்ட பயணங்கள் தடைப்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும். | விருச்சிக ராசி நேயர்களே, பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிக செலவழிக்க வேண்டாம். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். எதிரிகளின் பலம் குறையும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். |
தனுசு ராசி நேயர்களே, யாரையும் எப்போதும் சார்ந்து இருக்க வேண்டாம். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். தடைப்பட்ட வேலைகள் சீக்கிரத்தில் முடியும். தொழில், வியாபாரம் செழிப்படையும். | மகர ராசி நேயர்களே, மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உஷ்ணம் சமபந்தமான தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். |
கும்ப ராசி அன்பர்களே, உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். எதிர்பாராத சில வேலைகள் முடிவடையும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு. | மீன ராசி அன்பர்களே, குடும்பத்தில் யாவரையும் அனுசரித்து போகவும். மன சஞ்சலம் ஏற்பட்டு பின் நீங்கும். தடைப்பட்ட வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும். |
வார ராசி பலன் (11-08-2025 To 17-08-2025)
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். முன்பு வர வேண்டிய வாய்ப்புகள் உங்களது கவன குறையால் கைநழுவி போய் இருக்கலாம், இருப்பினும் மீண்டும் முயற்சி செய்தால் அதை திரும்ப பெற முடியும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது எல்லா வகையிலும் நல்லது. கடன் வாங்குவதை தவிர்க்கவும். உடல் நிலையில் சிறு பிரச்சனை என்றாலும் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது. பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்க முடியும். உத்யோகத்தில் அனுசரித்து போனால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். பரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும் | ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் சந்தோஷமும் தெம்பும் அதிகரிக்கும். குடும்பத்தினர் அனைத்து விஷங்களிலும் ஆதரவாக இருப்பர். சில தவிர்க்க முடியாத பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும், இதனால் உடல் அசதியும் மன சோர்வும் ஏற்படும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிதாக கவலை பட தேவையில்லை. உணவு விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி உங்களை வந்து சேரும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். பெரியோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும் |
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களின் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். நீங்கள் முடிந்து போனதை நினைத்து எப்போதும் கவலை பட வேண்டாம், இனி நடக்க போகும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாகவே நடக்கும் என்பதில் உறுதியாக சொல்லலாம். குடும்பத்துடன் ஆன்மிக பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். எந்த ஒரு சூழ்நிலையிலும் சுய கட்டுப்பாட்டுடன் வாழ விருப்பம் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நட்பு வட்டம் அதிகமாகும். கணவன் மனைவிடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். பரிகாரம் : பைரவரை வழிபடவும் | கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் ஏற்படும். மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பயணங்களால் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வர சிறிது தாமதாகும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். விருந்து, விழா விஷயங்களில் கலந்து கொள்ள முடியும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். பிரியமானவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து தர இயலும். பிறர் பாராட்டும் செயல்களை செய்ய முடியும். உத்தியோகத்தில் மன நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும் |
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப பிரச்சனைகளை பேசி சரி செய்து கொள்ள முடியும். பொருளாதாரத்தை பொறுத்தவரை எந்த பிரச்சனையம் இல்லை. பண வரவு கணிசமாக உயரும். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிடையே சின்ன மனஸ்தாபம் ஏற்படும். தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும். எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. புது வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியபாரம் தொடர்பான பயணம் ஏற்படும். பரிகாரம் : சூரிய பகவானை வழிபடவும் | கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எங்கையும், எப்போதும் எல்லா விஷயத்திலும் சிந்தித்து செயல் படவேண்டியது மிக முக்கியம். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் சில சங்கடங்களைத் தவிர்க்கலாம். கடந்த சில தினங்களாக இருந்து வந்த உடல் உபாதைகள் குறைந்து, ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தி காண முடியும். சுற்று வட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கு தனி மதிப்பும் இருக்கும். வரும் தடைகளை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். உறவினர்களுடன் நல்லுறவு ஏற்படும். வண்டி, வாகனங்களில் மெதுவாக செல்லவும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பரிகாரம் : பெருமாளை வணங்கி வழிபடவும் |
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப விஷயத்திலும் சரி பொதுவான காரியத்திலும் சரி கவனமாக செயல்படவும். பொருளாதார நிலையில் சின்ன பின்னடைவு ஏற்படலாம், கவனம் தேவை. மனதில் தெளிவு பிறக்கும். தாமதமாக நடந்துகொண்டிருந்த செயல்கள் கூட வேகமாக நடக்கத் தொடங்கும். வீண் செலவுகள் தவிர்த்து பணம் சேமிக்க பார்க்கவும். குடும்பம் உறுப்பினர்கள் அன்பு பாராட்டுவர் .வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான பலன்கள் உண்டு. பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் வேலைபளு இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பரிகாரம் : சுக்கிர பகவானை வழிப்படவும் | விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் பொறுமையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் முழுமையாகக் கைகூடும். மனதில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் ஒவ்வொரு செயல்களும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். பெரியோர்களின் ஆலோசனை படி கேட்டு நடப்பது நல்லது. முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் சிரம பட வேண்டியிருக்கும். கடினமாக உழைத்து செய்யும் காரியம் அனைத்தும் முழு வெற்றி பெரும். உணவு கட்டுப்பாடு மூலம் உடல் நலத்தை பாதுகாக்க முடியும். புதிய திட்டங்கள் சம்பந்தமாக பல புது நபர்களை சந்திக்க வேண்டியது இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும் |
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், இருப்பினும் அதை புத்திசாலித்தனத்தால் சாமர்த்தியமாக சமாளிக்க முடியும். மறைமுக எதிர்ப்புகள் தானே விலகும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்ப பொறுப்புகள் அதிகமாகும். புது வாகனம் ஒன்றை வாங்கமுடியும். திருமண முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். இரவு நேர பயணங்களை கவனமாக மேற்கொள்ளவும். எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியதிருக்கும். உத்தியோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும் | மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலிலும் பொறுமையும், நிதானமும் மிகவும் அவசியம். மன திருப்தியுடன் செய்யும் காரியும் வெற்றி பெரும். குலதெய்வ வழிபாடு நிறைவேற்றி நிம்மதி பெற முடியும். யோகா, தியானம் மன அமைதியை தரும். பயணங்கள் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெற்றோரின் உடல் நலனில் கவனம் தேவை. எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வரவு செலவுகள் செலவுகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். தூர பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. நண்பர்களின் ஒத்துழைப்பு நல்லவிதமாக இருக்கும். தேவையில்லாத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும் |
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ள முடியும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வந்து போகும். பெரியோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உடல் நலத்தில் பிரச்சனை வராமல் இருக்க வெளி உணவுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் வீண் செலவு எதும் ஏற்பட வாய்ப்பில்லை. திருமண முயற்சியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பயணங்களின் போது உங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். குடும்பத்திற்காக போடும் புது திட்டங்கள் வெற்றி பெறும். உங்கள் செயல்திறனை கண்டு மாற்றவர்கள் ஆச்சரியப்படுவர். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பல நுணுக்கங்களை கற்றுகொள்ள முடியும். பரிகாரம் : நவக்கிரத்தை தினமும் 9 முறை வலம் வரவும் | மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய முயற்சிகளில் இறங்கி அதில் அனுபவத்தை பெற முடியும். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவரை அனுசரித்து செல்வது உங்களுக்கு நன்மையைத் தரும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்யவும். வேண்டியவர்களிடம் விட்டு கொடுத்து போகவும். யாரிடத்திலும் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். கணவன் மனைவியிடையே பனிப்போர் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளை அளந்து பேசவும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். உத்யோகக்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும். . பரிகாரம் : ஆஞ்சநேயரை வடைமாலை சாற்றி வழிபடவும். |
தமிழ் மாத ராசி பலன்கள் ஆகஸ்ட் 2025
(01.08.2025 முதல் 31.08.2025) விசுவாவசு வருடம் ஆடி மாதம் 16ம் தேதி முதல் ஆவணி மாதம் 15ம் தேதி வரை
வாக்கிய பஞ்சாங்கப்படி 01-08-2025 முதல் 31-08-2025 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் அச்சப்பட தேவையில்லை. என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
உங்கள் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி, அந்தரம் மற்றும் கோச்சாரம் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். ஜாதக ரீதியாக யோக திசை நடைபெறுமானால் வரும் கெடு பலன்கள் மாறி நல்ல பலன்கள் கிடைக்கும்.
இந்த மாதம் கிரக நிலை மாற்றம் :
16.08.2025 – கடக – புதன்
17.08.2025 – சிம்ம – சூரியன்
21.08.2025 – கடக – சுக்கிரன்
30.08.2025 – சிம்ம – புதன்
மேஷ ராசி நேயர்களே, இந்த மாதம் எந்த ஒரு செயலையும் திட்டமிட்டபடி செய்ய முடியும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் ஆற்றல் உண்டாகும். உங்கள் முன்னேற்றத்திற்கு பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார். குடும்பத்தில் எதிர்பார்த்த சந்தோஷம் இருக்கும். தேக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் உடல் உபாதைகள் குணமாகும். நண்பர்கள் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வண்டி வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. யாரிடமும் வீண் விவாதம் செய்ய வேணாம். கடன் வாங்கவும் கொடுக்கவும் வேண்டாம். அடிக்கடி பயணங்கள் வேண்டிருக்கும். பண சேமிப்புக்கு இப்போதைக்கு இடமில்லை. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வெளி நாடு செல்லும் யோகம் உண்டு. பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை தொடங்கும். தொழில், வியாபாரம் சக்கை போடு போடும். உத்யோகத்தில் வருமானம் கணிசமான அளவு உயரும். சந்திராஷ்டமம் : 2,3,4,5 & 30,31 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம் | ரிஷப ராசி நேயர்களே, இந்த மாதம் பொருளாதார நெருக்கடிகளை சாமர்த்தியமாக சமாளிக்க முடியும். உங்கள் முன்னேற்றத்தில் சிறு சிறு தடைகளும், முயற்சிகளில் தடங்கலும் ஏற்படும், இருப்பினும் கடைசியில் எதிர்பார்த்த வெற்றி இருக்கும். மனதளவில் ஒரு சில பிரச்சனைகள் இருத்தலும் அதை பேசி சரி செய்து கொள்ள முடியும். உடல் நலத்தில் எதாவது சின்ன, சின்ன தொந்தரவுகள், பிரச்சனைகள் வந்து, சிறிதளவு வைத்திய செலவுகள் ஏற்படுவதுற்கும் வாய்ப்பு உள்ளது. வீண் விரயங்களை முடிந்த வரை தவிர்க்கவும். திருமண தடைகள் நீங்கும். செலவினங்கள் அதிகமாவதால் கடன் வாங்கும் சூழ்நிலை வரலாம். சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனை தீரும். குடியிருக்கும் வீட்டை. மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. புத்திசாலித்தனமாக பணத்தை சேமிக்கவும், குடும்பத்தில் எல்லோருடைய ஒத்துழைப்பும் தாராளமாக கிடைப்பதால் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். உத்யோகத்தில் பொறுமையும் நிதானமும் தேவை. தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். சந்திராஷ்டமம் : 5,6,7 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம். |
மிதுன ராசி நேயர்களே, இந்த மாதம் உங்கள் செயல் திறனில் வேகமும் விவேகமும் இருக்கும். மனத்துணிவு அதிகமாகும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எல்லா வகையிலும் முன்னேற்றம் உண்டாகி, உங்கள் வாழ்க்கை பாதை உயர தொடங்கும். இது வரை பட்ட கஷ்டங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க போகிறது என்பது தான் உண்மை. திருமண முயற்சிகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராகும். நட்பு வட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.. புதிய விடு, மனை வாகன யோகம் அமையும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தடையின்றி நடக்கும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உடல் அலைச்சல் அதிகம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். கணவன் மனைவிடைய ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப தேவைகளை நிறைவேற்றப் பெரிதும் சிரமப்பட வேண்டியிருக்கும். பல புதிய திட்டங்களை செயல்படுத்த முடியும். உங்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அது குறைய ஆரம்பிக்கும். உத்யோக இடத்தில் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரம் நன்கு சுறுசுறுப்பாக நடக்கும். சந்திராஷ்டமம் : 7,8,9,10 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம். | கடக ராசி நேயர்களே, இந்த மாதம் எந்த ஒரு செயலையும் ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து செயல்படுத்தவும். பொருளாதார சிக்கல் ஏற்பட்டாலும் சரி குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் சரி எல்லாம் தாற்காலிகமே. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். திட்டமிட்ட பயணங்கள் அதிக நன்மையை தரும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை எப்போதும் காப்பாற்ற முடியும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு வரும். சொந்த வீடு வாங்கும் திட்டம் மனதில் இருக்கும். உடல் நல தொந்தரவு இருக்கும், இருப்பினும் பெரிய பாதிப்பு ஏதும் வர வாய்ப்பு இல்லை. வருமானத்தை மீறிய செலவுகள் வரக்கூடும், எனினும் சிக்கனத்தை கடைபிடித்து வந்தால் கடன்களை தவிர்க்கலாம். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் நேரக்கூடும். எந்த ஒரு விஷயத்திலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதையும் சரியாக எடைபோடக் கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அனுகூலமான போக்கு காணப்படும். சந்திராஷ்டமம் : 10,11,12 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம். |
சிம்ம ராசி நேயர்களே, இந்த மாதம் உங்கள் எண்ணங்கள் எதுவாயினும் அது நிறைவேறும். செய்யும் காரியத்தில் நிதானம் தேவை. பண பிரச்சனைகள் அகலும். குடும்ப வருமானம் எந்த வித தடையின்றி கிடைத்தாலும் அதற்கேற்றபடி செலவுகளும் வரிசையாகக் காத்துக் கொண்டுருக்கும். வீடு மாற்றம் ஏற்படும். புது நட்பு வட்டம் உருவாகும். எதிலும் பதற்றமடையும் போக்கைக் கைவிட்டு நிதானமாக நடந்து கொள்ளப் பழகிக்கொள்ளவும். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போடா வேண்டாம். உடல் நலனில் அதிகம் அக்கறை எடுத்து கொள்ளவும். ஒரு சில உடல் உபாதைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் மூலம் மட்டுமே சீரடையும். வாகன யோகம் ஏற்படும். கணவன் மனைவிடத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறவும் வாய்ப்புண்டு. உங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களில் தலையிடும் பழக்கத்தை கைவிடவும். குடும்பத்தில் சில சலசலப்புகள் தோன்றி மறையும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தேக்க நிலை மாறும். உத்யோகத்தில் முக்கிய பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். தொழில், வியாபாரம் சாதகமாக இருக்கும். சந்திராஷ்டமம் : 12,13,14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம். | கன்னி ராசி நேயர்களே, இந்த மாதம் பல சிரமங்களுக்கு மத்தியில் பல நன்மைகள் நடைபெறும். யோகமான பலன்களை நடக்கும் சூழ்நிலைகள் உருவாகும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். எதிரி தொல்லை இனி மேல் இருக்காது. பண பிரச்சனை வந்தாலும் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். உறவினர்களிடையே ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சுற்றி இருப்பவர்களிடம் பேசும் போது நிதானம் தேவை. திருமண பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் காணப்படும். வாகன பயணத்தில் கவணம் தேவை. வழக்கு விவகாரங்களில் அனுகூலமான திருப்பு வரும். கணவன் மனவிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். குடும்பத்தில் குதூகுலமும் காணப்படும். பெரிய மகான்களின் ஆசியும் பெரியவர்களின் ஆசியும் கிட்டும். கடுமையாக உழைக்கும் குணமும், எதிலும் சிந்தித்து முடிவு எடுக்கும் தன்மையும் உங்களை தனித்துக் காட்டும். உத்யோகத்தில் வேலை பளு குறையும். புதிய தொழில், வாய்ப்புகள் தேடி வரும். சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம். |
துலாம் ராசி நேயர்களே, இந்த மாதம் முதல் புது முயற்சிகள் நல்ல பலனை தரும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எடுத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தாரின் தேவைகள் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயர தொடங்கும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை எளிதில் முறியடிக்க முடியும். யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். வீடு, மனை வாங்கும் எண்ணம் கூடிவரும். வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைபிடிக்கவும். மனக்கவலைகள் மறையும். குடும்ப பிரச்சனைகள் தீரும். வரவுக்கு மீறிய செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க முடியும். உறவினர்களுடன் பகைமை வரலாம். ஆன்மீக சிந்தனைகள் அதிகமாகும். எடுக்கும் முயற்சிகள் யாவும் கைகூடும். சில சமயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தொழில், வியாபாரம் விருத்தியாகும். உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சந்திராஷ்டமம் : 16,17,18 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம். | விருச்சிக ராசி நேயர்களே, இந்த மாதம் பெரியளவில் நல்லது நடக்காவிட்டாலும் கெடுதல் நிச்சயம் நடக்காது. பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சுப விரைய செலவுகள் நிறைய உண்டு. ஆன்மீக ஆர்வம் கூடும், அதனால் பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். ஆன்மீக பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். சமூகத்தில் உங்கள் புகழ் அந்தஸ்து உயரும். எந்த ஒரு இடத்திலும் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் கண்காணாமல் போவர். வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனம் தேவை. வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். வம்பு வழக்குகளில் கவனமாக இருக்கவும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை ஏற்படும். குல தெய்வ வழிபாட்டினை தவறாமல் மேற்கொள்ளவும். பொது சேவையில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். கையில் எடுத்த காரியங்கள் இனிதே நடைபெறும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும். சந்திராஷ்டமம் : 18,19,20 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம். |
தனுசு ராசி நேயர்களே, இந்த மாதம் பெண்களின் ஆதரவு மற்றும் ஆலோசனையும் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயர தொடங்கும். உங்கள் திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் வரும். உடல் நலம் நன்றாக இருக்கும். தெய்விக வழிபாட்டில் நம்பிக்கை ஏற்படும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் கையோடு வரும். திடீர் பயணங்களால் சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். அத்தியாவசிய தேவைகளை பூர்த்தியாகும். உறவினர்கள் மத்தியில் அவ்வப்போது சிற்சில மனக்கசப்புகள் வரலாம். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு காணப்படும். அயல்நாடு செல்ல முயன்ற ஒரு சிலரின் விருப்பம் நிறைவேறும். இக்கட்டான சமயங்களில் சாமர்த்தியமாக நடந்து கொள்ளவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். சந்திராஷ்டமம் : 20,21,22,23 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம். | மகர ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல புதுமையான விஷயங்களை செய்ய முடியும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் நலனும், உள்ள நலனும் கூடும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற மரியாதையும், பலனும் கிடைக்கும். குடும்ப நலனில் அதிகம் அக்கறைகொள்ளவும். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் வராமல் பார்த்துக்கொள்ளவும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களை வந்தடையும். ஒரு சிலர் புது வீட்டிற்கு மாறும் சூழ்நிலை உருவாகும்.புதிய வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்குள் பரஸ்பர ஒற்றுமை நிலவி வரும். ஆன்மீகத்தால் மனதில் அமைதி ஏற்படும். ஆன்மீக பெரியோர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். எந்த முயற்சிகளிலும் தடையும், தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. யாருக்கும் எந்த காரணத்தை கொண்டும் வாக்குறுதி தர வேண்டாம். உத்யோகத்தில் நல்லதோர் முன்னேற்றம் காணலாம். வியபாரத்தில் புது முதலீடுகளை தாராளமாக மேற்கொள்ளலாம். சந்திராஷ்டமம் : 23,24,25 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம். |
கும்ப ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்திற்கு நன்மை தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். பெரிய மனிதர்களின் நட்பும் அவர்களால் பல உதவிகளும் கிடைக்கும். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். உங்கள் ஆசைகள் ஒவொன்றாக நிறைவேறும். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். மனதில் எப்போதும் இருந்து வரும் பதற்றம், பயம் ஆகியவற்றை இதன் மூலம் மறந்து நிம்மதியைக் காண முடியும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும், எனினும் அதை சாமர்த்தியமாக சமாளிக்க முடியும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். சுப நிகழ்ச்சிகளின் தொடர்பாக அலைச்சல், செலவுகள் ஏற்பட்டாலும், மனத்திருப்தி கொள்ளும் வகையில் நற்பலன் உண்டாகும். வேலையின்றி இருப்பவர்கள் அதிக முயற்சி செய்தால் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் மேற்கொள்ளும் திட்டங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். சந்திராஷ்டமம் : 25,26,27 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம். | மீன ராசி நேயர்களே, இந்த மாதம் நினைத்த காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் வேகமும் அதிகமாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மனக்கவலைகள் படிப்படியாக குறையும். கோப தாபங்களை குறைத்து கொண்டு பிறரிடம் அனுசரித்து சென்றால் மட்டுமே வாழ்க்கையில் பெரியதொரு முன்னேற்றத்தை அடையமுடியும். குடும்பத்தின் மேலும் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். மனதை அழுத்திக் கொண்டுருந்த பல பிரச்சனைகள் விலகும். புதியவர்களின் நட்பு ஏற்படும். ஒரு சிலருக்கு புது வீட்டிற்கு குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். தெய்வ அனுக்கிரகமும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு. சிலருக்கு வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு அமையும். உங்கள் பேச்சு திறமையும், பெருந்தன்மையும் பார்த்து மற்றவர்கள் அசந்து போவர். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளிடம் நல்லுறவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் படிப்படியாக வளர்ச்சி காணப்படும். சந்திராஷ்டமம் : 27,28,29,30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம். |
தமிழ் நாட்காட்டி ஆகஸ்ட் 2025 | |
அமாவாசை | 22-ஆகஸ்ட்-2025 வெள்ளிக்கிழமை |
பௌர்ணமி | 08-ஆகஸ்ட்-2025 வெள்ளிக்கிழமை |
கார்த்திகை | 16-ஆகஸ்ட்-2025 சனிக்கிழமை |
சஷ்டி விரதம் | 29-ஆகஸ்ட்-2025 வெள்ளிக்கிழமை |
சங்கடஹர சதுர்த்தி | 12-ஆகஸ்ட்-2025 செவ்வாய்கிழமை |
சதுர்த்தி | 27-ஆக-2025 புதன் |
பிரதோஷம் | 06-ஆகஸ்ட்-2025 புதன்கிழமை 20-ஆகஸ்ட்-2025 புதன்கிழமை |
திருவோணம் | 08-ஆக-2025 வெள்ளிக்கிழமை |
மாதா சிவராத்திரி | 21-ஆகஸ்ட்-2025 வியாழன் |
ஏகாதசி | 05-ஆகஸ்ட்-2025 செவ்வாய்கிழமை 19-ஆகஸ்ட்-2025 செவ்வாய் |
அஷ்டமி | 01-ஆகஸ்ட்-2025 வெள்ளிக்கிழமை 16-ஆகஸ்ட்-2025 சனிக்கிழமை 31-ஆகஸ்ட்-2025 ஞாயிறு |
நவமி | 02-ஆகஸ்ட்-2025 சனிக்கிழமை 17-ஆகஸ்ட்-2025 ஞாயிறு |
விடுமுறைகள் | 15-ஆகஸ்ட்-2025 வெள்ளிக்கிழமை அரசு விடுமுறைகள் 16-ஆகஸ்ட்-2025 சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி 27-ஆகஸ்ட்-2025 புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி |
திருமண நாட்கள் | 20-Aug-2025 புதன்கிழமை தேய்பிறை 21-Aug-2025 வியாழன் தேய்பிறை 27-Aug-2025 புதன்கிழமை வளர்பிறை 28-Aug-2025 வியாழன் வளர்பிறை 29-Aug-2025 வெள்ளிக்கிழமை வளர்பிறை |
திருவிழாக்கள் | 03-Aug-2025 ஞாயிறு ஆடிப்பெருக்கு விழா 08-Aug-2025 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் 09-Aug-2025 ஆவணி அவிட்டம் 12-Aug-2025 செவ்வாய் மஹாசங்கடஹர சதுர்த்தி 16-Aug-2025 சனிக்கிழமை கோகுலாஷ்டமி 27-Aug-2025 புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி |