இந்தப் பெண் பலரிடம் ஜப்பானில் இரண்டு வருடங்களுக்கு வேலை வாய்ப்பு வீசாக்களை பெற்றுத் தருவதாக கூறி பெரும் தொகையான பணத்தை மோசடி செய்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு கம்பளையில் வசிக்கும் நபரொருவர் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 500,000 ரூபாவை முற்பணமாக கொடுத்துள்ளார்.
இந்தப் பெண் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுதரவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், அவருக்கு எதிராக கல்கிசை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில் இதேபோன்ற முறையில் பலர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகநபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) பதிவு செய்யாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என வலியுறுத்தியுள்ளது.