அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்குகளை, மதுரை ஐகோர்ட் கிளை விசாரிக்கிறது. அதில், தி.மு.க., அரசின் காவல்துறை, ‘மலையில் ஆடு, கோழி பலியிடுவது காலங்காலமான வழக்கம்; நெல்லிதோப்பு பகுதியில் தொழுகை நடத்த தடை இல்லை’ என அப்பட்டமான பொய்யை கோர்ட்டில் கூறி, முருக பக்தர்களின் முதுகில் குத்தியுள்ளது,

மதுரை கலெக்டர் மற்றும் தி.மு.க., அரசு சார்பிலான வாதங்களில், ‘திருப்பரங்குன்றம் மலை, நீண்ட காலமாக சிக்கந்தர் மலை என்றே அழைக்கப்படுகிறது; ஆடு, கோழி பலியிட்டால், தீட்டு என்பது மனித சமூகத்துக்கு எதிரானது. 18ம் படி கருப்பண்ணசாமிக்கு பலியிட்டு தான் வழிபடுகின்றனர்” என, அபத்தமான சிண்டு முடிக்கும் வாதத்தை முன் வைத்துள்ளனர்.
ஆங்கிலேய ஆட்சியிலேயே, மலை முழுதும் கோவிலுக்கே சொந்தம் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தி.மு.க., அரசு, பொய் வாதங்களை முன்வைத்து, கோவிலின் புனிதத்தை கெடுக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது.
ஹிந்து அறநிலையத்துறை சார்பில், வலுவான வாதங்களை முன்வைத்து, கோவிலுக்கு ஆதரவாக உள்ள, முந்தைய தீர்ப்புகளை, எடுத்துரைக்க வேண்டும். மலையில் தீபம் ஏற்ற கோர்ட் பிறப்பித்த உத்தரவை உடனே, நடைமுறைப்படுத்த வேண்டும். முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு, தி.மு.க., அரசு மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.