பாகிஸ்தான் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுபோன்ற தினங்களில் பாகிஸ்தானியர்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், கராச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, 8 வயது சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதேபோல, கோரங்கி, லையரி, மெஹ்மூதாபாத், அக்தர் காலனி, கேமரி, ஜேக்சன், ஓரங்கி டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் இதே போன்ற கொண்டாட்டத்தில் 5 பெண்கள் உள்பட 42 பேர் வான்வழி துப்பாக்கிச்சூட்டுக்கு உயிரிழந்துள்ளனர்.