அவரது அறிக்கை:
தி.மு.க. அரசு, கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி சமர்பித்த பட்ஜெட்டில், ‘தாயுமானவர்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தது.

வேலை வாய்ப்பு அதன்படி, ‘ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், மாற்றுத் திறனாளிகள், சிறப்பு குறைபாடுடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் என, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற, அனைத்து உதவிகளும் வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட்டில் அறிவித்த திட்டத்தை செயல்படுத்தாமல், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு, ‘தாயுமானவர்’ என, முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டியுள்ளார். சொல்வது ஒன்று; செய்வது ஒன்று. இதுதான் தி.மு.க. அரசு.
புதிய பெயர் ஏற்கனவே, அ.தி.மு.க. ஆட்சியில், பொது மக்களுக்கு, ரேஷன் பொருட்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே, நேரடியாக எடுத்து சென்று வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டது.
அதை ‘காப்பி பேஸ்ட்’ செய்து, தனது பெயரை அல்லது புது பெயரை சூட்டி, அரசு பணத்தில், பல கோடி ரூபாய் செலவில், வெற்று விளம்பரம் செய்துள்ளனர்.
கடந்த 51 மாதங்களாக, எந்த புதிய திட்டத்தையும் உருவாக்காத தி.மு.க. அரசு, தேர்தல் நெருங்கியதும், தொடர்ந்து அ.தி.மு.க.வின் திட்டங்களுக்கு, புதிய பெயர் வைத்து விளம்பரப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த, தாயுமானவர் திட்டம் வேறா; தற்போது துவக்கப்பட்டுள்ள ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் வேறா. – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.