பெரும்பாலான பெண்கள் தங்களை அழகுப்படுத்துவத்றகாக உதடுகளுக்கு உதட்டுச்சாயத்தை பூசுகின்றனர்.

ஆனால் கடைகளில் விற்பனை செய்யப்படும் உதட்டுச்சாயங்களில் பல கெமிகல்ஸ் உள்ளன.
இதனால் உதடு கருமையாதல், புற்றுநோய் ஏற்படல், உதடு அரிப்பு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
உதடுகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு வீட்டிலேயே உதட்டுச்சாயம் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம்.
தேவையானவை
- பீட்ருட்
- நெய் 1/2 தே.கரண்டி
- தேன் 1/2 தே.கரண்டி
செய்முறை
- பீட்ருட் ஒன்றை நன்றாக சீவியதும், அதனை சிறிது சிறுதாக வெட்டி அரைக்க வேண்டும்.
- அரைத்த பீட்ருட் சாறை மூன்று முறை வடிக்கட்டி எடுக்க வேண்டும்.
- அதன் பின்னர் பீட்ருட் சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
- பிறகு அதில் நெய் மற்றும் தேன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
- இறுதியாக விருப்பமான ஒரு சிறிய போத்திலில் ஊற்றி 20 நிமிடங்கள் ஆற விட்டு எடுத்தால் உதட்டுச்சாயம் தயார்.
🚩 பொறுப்புத் துறப்பு.
⚠️ அமிழ்து வலைத்தளம் அழகு குறிப்புகள் மற்றும் தயாரிப்பு மதிப்புரைகளை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்குகிறது. தனிப்பட்ட முடிவுகள் மாறுபடலாம். எந்தவொரு புதிய தயாரிப்புகள் அல்லது சிகிச்சைகளையும் முயற்சிக்கும் முன் தோல் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரை அணுகவும்.
⚠️இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அல்லது தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எந்தவொரு பாதகமான எதிர்விளைவுகள் அல்லது விளைவுகளுக்கும் நாங்கள் (அமிழ்து) பொறுப்பல்ல.