பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் வத்தளை, பங்கலாவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு – கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 49 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து 309 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 5 கோடி ரூபாய் ஆகும்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.