அதன் அறிக்கை:
தமிழகத்தில், நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதிகளில், தலா, 5 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, கோவை மாவட்டம் சோலையார், வால்பாறை, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதிகளில், தலா, 4 செ.மீ., மழை பெய்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, தெற்கு ஒடிஷா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
7 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல், ஏழு நாட்களுக்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்று மணிக்கு, 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு, 65 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.