ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்பை (ஆக.18) , வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்..

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப், அலாஸ்கா நகரில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரியில் இருவரும் சந்தித்து பேசினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போதும் அதுபோல் நடக்காமல் இருக்க ஜெலன்ஸ்கி உடன் சேர்ந்து, டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக பிரிட்டன் பிரதமர், பிரான்ஸ் அதிபர், ஜெர்மனி அதிபர் உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் அறிவித்து இருந்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் டிரம்ப்பை ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். அப்போது புடின் தெரிவித்த விஷயங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் தெரிவித்தார்.
சந்திப்புக்கு பின் டிரம்ப் கூறியது, போரை முடிவுக்கு வருவதற்காக நியாயமான வாய்ப்புகள் உள்ளது.இங்கு வருகை தந்த ஜெலன்ஸூக்கு நன்றி . போரை முடிவுக்கு கொண்டு வர புடினும் விரும்புகிறார்.. இது வரை 6 பேர்களை நிறுத்தியுள்ளேன். விரைவில் உக்ரைனில் அமைதி திரும்பும். உலக நாடுகள் இந்த போரால் தளர்ந்து போய்விட்டன. நான் 6 போர்களை நிறுத்தி உள்ளேன். இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என நம்புகிறேன். இது தொடர்பாக ரஷ்யா- உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
ஜெலன்ஸ்கி கூறியது, எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமெரிக்காவிற்கு பாராட்டுகள். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.
தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ்,இத்தாலி,பின்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் டிரம்ப்பை சந்தித்து பேசினர். அப்போது ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்ஸூலா வோன் டையர் லியான், நோட்டோ அமைப்பின் செயலர் மார்க் ரூட்டே ஆகியோரும் உடனிருந்தனர்.
பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர் கூறியது, மாறாக போரை முடிக்கு கொண்டு வர வரலாற்று சிறப்பு மிக்க முயற்சியை எடுத்துள்ளார் டிரம்ப் என்றார். இதன் மூலம் உக்ரைனின் பாதுகாப்புக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் உறுதி செய்யப்படும் என்றார்.
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கூறியது, உக்ரைனில் அமைதிக்கான வலுவான கருவியாக நட்புறவு நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப் கூறியது, உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் முன்னேற்றம் அடைந்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்பைப் பாராட்டுகிறேன் என்றார்
பிரான்ஸ் அதிபர் மெக்ரான் கூறியது, டிரம்ப், புடின் , ஜெலென்ஸ்கி , மற்றும் ஐரோப்பிய நாடு தலைவர்கள் சந்திப்பிற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.
இறுதியில் செய்தி சேகரிக்க வந்திருந்த சர்வதேச ஊடகங்களுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். சந்திப்புக்கு பின் அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இப்புகைப்படம் வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ளது