மனித உருமை ஆணையகத்தின் 60’வது கூட்டத்தொடரை முன்னிட்டு மனித நேய ஈருருளிப்பயணம் .

தொடங்கவுள்ள மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கியஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம் 28.08.2025 அன்று பிரித்தானியா பிரதமர் இல்லத்திலிருந்து ஆரம்பித்து அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம், ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக 15.09.2025 அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலை வந்தடைவுள்ளது.
தமிழீழமே நிரந்தரத்தீர்வு என்பதை வலியுறுத்தி பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய குறித்த ஈருருளிப்பயண கவனயீர்ப்புப் போராட்டம் 28.08.2025 அன்று பிரித்தானியாவில் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐரோப்பியப் பாராளுமன்றம் ஊடாக 15.09.2025 அன்று ஜெனிவா மனித உரிமைகள் பேரவை முன்றலை வந்தடைய உள்ளது
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய ஈருருளிப்பயணத்திற்கு வலுசேர்க்க அனைத்து உறவுகளையும் 28.08.2025 அன்று காலை 10.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக வருமாறு உரிமையுடன் வேண்டுகின்றோம்.
தமிழ் இளைஞர் அமைப்பு – பெல்ஜியம் (TYO – BELGIUM)
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பெல்ஜியம் (TCC – BELGIUM)