கடற்புலி லெப். கேணல் குகன்
கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன்
கடற்கரும்புலி கப்டன் இசையரசன்
– வீரவணக்க நாள் இன்றாகும்.

24.08.2006 அன்று விடுதலைக்கு வளம் சேர்க்கும் விநியோக நடவடிக்கையின் போது மட்டக்களப்பு மாவட்டம் மாங்கேணிப் பகுதியில் தேசவிரோதிகளால் (கருணா குழுவால்) கைதுசெய்யப்பட்டு மேற்கொண்ட தாக்குதலில் துரோகத்தின் வஞ்சனையால் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன், கடற்புலி தலைசிறந்த இயந்திரப் பொறியியலாளர் லெப். கேணல் குகன் / குன்றலினியன் ஆகிய மாவீரர்களின் 19 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!

கடற்புலி லெப்.கேணல் குகன் (குன்றலினியன்)
பாலகிருஸ்ணன் துஸ்யந்தன்
ஏழாலை மேற்கு, யாழ்ப்பாணம்
08.01.1978 – 24.08.2006
24.08.2006 அன்று மாங்கேணிப் பகுதியில் தேச விரோதிகளால் தாக்கப்பட்டு வீரச்சாவு.

கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன்
திருகோணமலை
24.08.2006 அன்று மாங்கேணிப் பகுதியில் தேச விரோதிகளால் தாக்கப்பட்டு வீரச்சாவு

கடற்கரும்புலி கப்டன் இசையரசன்
24.08.2006 அன்று மாங்கேணிப் பகுதியில் தேச விரோதிகளால் தாக்கப்பட்டு வீரச்சாவு.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”