திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 55. இவர் பெயின்டராக வேலை பார்க்கிறார். இவர் மகள் மகள் வித்யா, 28; பட்டதாரியான இவர், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகி வருகிறார். தந்தை, மகள் இருவரும் காங்கயம் பஸ் ஸ்டாண்ட் பேக்கரியில் டீ சாப்பிட சென்றனர். அப்போது ரோட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடந்ததை இருவரும் கவனித்தனர்.

யாரோ பணத்தை தவற விட்டுச்சென்றதை புரிந்து கொண்ட தந்தை மகள் இருவரும், பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்க விரும்பினர். உடனடியாக அந்த பணத்தை காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று ஒப்படைத்தனர்.
‘பிறர் பணம் நமக்கு தேவையில்லை. நாம் உழைத்த பணம் நமக்கு போதும்’ என்று செயல்பட்ட தந்தை, மகள் செயல் குறித்து உங்களது கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் கமென்ட் செய்யுங்க மக்களே!